குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ரஷ்ய வீரரின் பதக்கம் பறிப்பு!!!

Saturday, February 24, 2018

தென்கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்திய அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கியின் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர் தனது மனைவி அனஸ்டசியாவுடன் இணைந்து கர்லிங் கலப்பு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார்.
 இந்நிலையில் அவரே குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவரின் பதக்கத்தை ஒலிம்பிக் குழு பறித்துள்ளது
மேலும்....

அரிசிக்காக அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞன்!!!

Image result for அரிசிக்காக அடித்துக் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞன்!!இந்தியாவின்  கேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள் கையில் அரிசி மூட்டையுடன் ஒருவரை பார்த்துள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி உணவுபொருட்கள் திருடு போயுள்ளது. அப்போது சி.சி.டிவி கமராவில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தோடு இவரின் உருவம் ஒத்துப் போக பொதுமக்கள் அவரைப்பிடித்து சராமரியாக அடித்து உதைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படத்துள்ளனர்.
ஆனால் பொலிஸ் வாகனத்திலேயே மலைவாழ் வாலிபர்  சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.
விசாரணையில் குறித்த வாலிபர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் 27 வயது மகன் மது  என்பது தெரியவந்துள்ளது.
குறித்த வாலிபரை திருடன் என தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும் அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
 இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வர, அவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் அந்த வாலிபரை தாக்கியவர்கள் பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்....

கறுப்பு பட்டியலில் இருந்து மயிரிழையில் தப்பித்த பாகிஸ்தான்!!!

Image result for பாகிஸ்தான்பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் கண்காணிப்பு குழுவின் கறுப்பு பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தப்பியுள்ளது.
 பாரிசில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 36 நாடுகள் கலந்து கொண்டன. உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை இக்குழு கண்காணித்து வருகிறது. 
இக்கூட்டத்தில் பயங்கரவாத செயல்களை ஒடுக்க பாகிஸ்தான்  எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பலமுறை எச்சரித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தானை  கறுப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா பரிந்துரை செய்தது. 
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா கூறியதாவது,
"பாகிஸ்தானுடனான உறவை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு பாகிஸ்தானின்  பொறுப்பற்ற செயலே காரணம். கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த தெற்காசிய கொள்கை திட்டத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான்  இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறி இருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திருப்தி அடையவில்லை" எனகூறினார்.
இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 35 நாடுகள் அமெரிக்காவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. கண்காணிப்புக் குழுவில் உள்ள 36 நாடுகளில் மூன்று நாடுகள் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. 
சீனா சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு அளிக்கும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. கடைசி நிமிடத்தில் சீனாவும் சவுதியும் பல்டி அடிக்க துருக்கி மட்டுமே பாகிஸ்தானுக்கு  ஆதரவாக வாக்களித்தது.
இருந்தும் கடைசி  நேரத்தில் பாகிஸ்தான் இந்த பட்டியலில் இருந்து தப்பி விட்டது. பயங்கரவாத நிதி அல்லது பணமோசடிக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்க தவறிய நாடுகளின் பெயர்களின்  கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஆயினும் பாரிஸை அடிப்படையாகக் கொண்ட சட்டவிரோத நிதிக்கு எதிரான உலகளாவிய தராதரங்களை கண்காணிக்கும் FATF சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு இதனை உறுதி செய்யவில்லை.
முன்னதாக  பல்வேறு ஊடகங்கள் பாகிஸ்தான்  கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு  இருப்பதாக கூறி இருந்தன.  ஆனால் அந்த பட்டியலில்  கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தப்பி விட்டது. 
மேலும்....

வழமைக்கு திரும்பியது மலையகத்திற்கான ரயில் சேவை!!!

Image result for மலையகத்திற்கான ரயில்கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் நேற்று மாலை வேளையில் தடம் விலகியதால் தடைப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது.
குறித்த நானுஓயா ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு புறம் மட்டும் ரயில் சேவை இடம்பெறும் எனவும் இரண்டாவது ரயில் ஓடு பாதை மறுசீரமைக்கப்படுவதாகவும் அதன்பின் வழமைப்போன்று ரயில் சேவைகள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கொழும்பு நோக்கிச் சென்ற உடரட மெனிக்கே இன்று காலை வழமைபோன்று புறப்பட்டுச் சென்றதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்....

இலங்கை, இந்திய பக்தர்கள் படை சூழ இனிதே நிறைவு பெற்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் திருவிழா!!

Image result for கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார்இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 இந்நிலையில் இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.
வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மொழியில் ஆராதனைகள் இடம்பெற்றதோடு இந்தியாவிலிருந்து தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் கொண்டு வரப்பட்டு கொடியேற்றிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 62 படகுகளில் 1,968 பேர் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்து 6,182 பேரும் பங்கேற்றுள்ளன
 இவர்களுக்கான குடிநீர் வசதி, தங்குமிட வசதி உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளையும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் உதவியுடன், யாழ் உள்ளுராட்சி மன்றங்களின் அனுசரனையுடன் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்ற இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான உணவு இலங்கை கடற்படையால் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 மேலும் இங்கு வந்த பக்தர்கள் தங்களுக்குள் இனம் மதம் எல்லை வேறுப்பாடுகளை கடந்து உணவுகளையும் இனிப்புக்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
கடந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை அதனால் இவ் வருட திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்....

ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்திர வதிவிடப் பிரதிநிதி நேற்று காலமானார்!!!

Image result for உனா மக்கோலிஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய வந்த உனா மக்கோலி நேற்று உயிரிழந்துள்ளார் என கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மருத்துவ விடுப்பில் சிகிச்சை பெற்றுவந்த  நிலையிலேயே 54 வயதான உனா மக்கோலி உயிரிழந்துள்ளார். 
 ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக இலங்கையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய உனா மக்கோலி  இலங்கையில் ஐக்கிய நாடுகளின் 21 அமைப்புகளுக்கு தலைமைப் பதவியை வகித்துள்ளார். 
அயர்லாந்தைச் சேர்ந்த உனா மக்கோலி இரண்டு ஆண்டுகள் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்....

4 மணித்தியாலங்களில் 2,564 பேர் கைது !!!

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2,564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில் 16,256 பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
இதன்போது மது போதையில் வாகனங்களை செலுத்திய 504 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 720 பேரும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 741 பேரும், போதை பொருளுடன் தொடர்புடையவர்கள் 524 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்....

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

சமையல் குறிப்பு

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups