கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பீமனஹள்ளியை சேர்ந்தவர் பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அருகில் உள்ள கருடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இருவருக்கும் கடந்த 8ம் தேதி திருமணம் marriage-groom-pregnancy நடந்தது. இதை தொடர்ந்து மறுவீடு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து பிரேமா கணவன் வீட்டிற்கு சென்றாள்.
இந்த நிலையில் பிரேமா தனக்கு வயிறு வலிப்பதாக கணவனிடம் கூறி உள்ளார். மாப்பிள்ளையும் வெள்ளந்தியாக வெயிலால் உடல் சூடாகி வயிற்று வலி ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதினார். இருந்தாலும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அங்கு பரிசோதனை செய்ததில் பிரேமா 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதனை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெண் வீட்டார் தங்களை ஏமாற்றி விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், அதில் தான் திருமணத்திற்கு முன்னர் சந்திரசேகர் என்பவரை காதலித்தேன். அப்போது அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் அடைந்தேன். இதனை தெரிவித்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில் எனக்கு வீட்டில் வெங்கடேசுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இதனால் இவரை திருமணம் செய்து கொண்டேன் என பிரேமா கூறினார்.
அது சரி 8 மாத கர்ப்பம் என்றால் வயிறு வீங்கி இருக்குமே. அதை கூடவா மாப்பிள்ளை பார்க்கல. ஓ தொப்பை என்று நினைத்திருப்பார் போலும்.