Home » » அரையிறுதியில் அஸ்வினுக்கு இடமுண்டு: விராட் கோலி சூசக தகவல்

அரையிறுதியில் அஸ்வினுக்கு இடமுண்டு: விராட் கோலி சூசக தகவல்

சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மூன்று லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்று ‘பி’ பிரிவில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்படவில்லை. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் களம் இறங்கினார். அதில் அம்லா விக்கெட்டை வீழ்த்தி தென்ஆப்பிரிக்காவின் ரன் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
நாளைய அரையிறுதிப் போட்டியில் இந்தியா வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இதில் அஸ்வின் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழும்பியது.
இந்நிலையில் நாளைய போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பில், ‘‘கடந்த போட்டியில் அஸ்வின் அபாரமாக பந்து வீசினார். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அணியில் மாற்றம் செய்வதற்கான சிறந்த காரணம் ஏதும் இல்லை’’ என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இதனால் நாளைய போட்டியில் அஸ்வின் களம் இறக்கப்படுவார் என்பதை விரா் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘ரோகித் சர்மாவிற்கு எந்தவித காயமும் இல்லை. விளையாடும் நிலையில் உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups