
அவர்களை பென்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
களுவாமோதர ரயில் வீதியில் பயணிக்கும் போது குறித்த வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவர்கள் பயணித்த வாகனம், ரயில் வீதிக்கு நடுவே பயணிக்கும் போது மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த சமுத்ரா தேவி ரயிலில் மோதியுள்ளது.
எப்படியிருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டமையினால் வேன் சற்று பின் பக்கமாக வந்துள்ளது. இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் வேனிற்கு மாத்திரம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.