வடமாகாண சபையில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவரது தன்னிலை விளக்கம் கோரப்பட்டிருந்தது.
இருப்பினும் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் 96ஆவது அமர்வில் தன்னிலை விளக்கத்தை அவர் எடுத்து இயம்பவில்லை.
இந்த நிலையில் அவர் தனது தன்னிலை விளக்கத்தை ஊடங்களுக்கு வெளியிட்டுள்ளார்.
குறித்த தன்னிலை விளக்கத்தில், விசாரணைக்குழு தொடர்பிலான விளக்கங்களை அமைச்சர் இதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவருடைய நியாயப்படுத்தல்கள் அடங்கிய கோவையினை உரிய முறையில் பரிசீலனைச் செய்திருந்தால் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டிருக்க முடியும்.
எனவே தீர்ப்பு முன்னரே எழுதப்பட்டு விட்டதா என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.