
தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்கு இன்றைய தினம் தொடக்கம் இராணுவத்தினரின் உதவி பெறப்படவுள்ளது.
விசேடமாக டெங்குநோய் குப்பைகளினாலேயே அதிகம் பரவல் அடைகின்றது. ஏனெனில் குவிந்து கிடக்கும் குப்பைகளில் இருந்து டெங்கு நுளம்புகள் பெருக்கமடைகின்றன.
டெங்கு நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதிலும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் இதற்கு பொது மக்களது ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது” என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்