Home » » 19 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுவர் இல்ல காப்பாளரின் கணவர் சிக்கினார்

19 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுவர் இல்ல காப்பாளரின் கணவர் சிக்கினார்

மேல் மாகாண சபையின் நன்­ன­டத்தை மற்றும் சிறுவர் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் கொழும்பை அண்­மித்த, கொஹு­வலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் உள்ள 19 சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த குற்­றச்­சாட்டில், அந்த இல்­லத்தின் காப்­பா­ள­ரான பெண்ணின் கணவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
நேற்­றைய தினம் அவரைக் கைது செய்­த­தா­கவும், தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு கிடைத்த முறைப்­பாடு ஒன்­றுக்கு அமை­வாக, அந்த அதி­கார சபை கொஹு­வலை பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இந்த கைது நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
குறித்த இல்­லத் தில் தங்­கி­யி­ருந்த 10 வய­துக்கும் 17 வய­துக்கும் உட்­பட்ட 19 சிறு­மி­களை நேற்று கொஹு­வலை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழை த்து, பொலிஸ் நிலைய பொறுப்ப திகா­ரியின் ஆலோ­ச­னையின் பிர­காரம் வாக்கு மூலங்கள் பெறப்பட்­டுள்­ளன.
அதன் பின்னர் சிறு­மியர் வெளிப்­ப­டுத்­திய தக­வல்­க­ளுக்கு அமை­வாக 62 வய­து­டைய குறித்த சந்­தேகநபரைக் கைது செய்­த­தாக பொலி ஸார் கேச­ரி­யிடம் தெரி­வித்­தனர். இந் நிலையில் கைது செய்­யப்பட்ட சந்­தேகநபரை நீதிமன் றில் ஆஜர் செய்து எதிர்­வரும் ஆகஸ்ட் மூன்றாம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­ய லில் வைத்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.
சிறுவர் இல்ல சிறு­மி­க­ளிடம் பெற்­றுக்­கொண்ட வாக்கு மூலங்­க ளைத் தொடர்ந்து அந்த சிறுவர் இல்­லத்­தையும் நேரில் சென்று பார்வை யிட்­டுள்­ளனர். இரு மாடி­களைக் கொண்ட குறித்த இல்­லத்தின் மேல் மாடியில், உறங்­கு­வ­தற்­கான வச­தி­களைக் கொண்ட பூரண அறைகள் இருந்த போதும் அவை ஒருபோதும் குறித்த சிறு­மி­ய­ருக்கு பயன்­ப­டுத்த அனுமதிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.
அத்துடன் குறித்த சிறு­மி­ய­ருக்கு சரி­யான முறையில் உணவு, பானங்கள் கூட அங்கு வழங்­கப்பட்­டி­ருக்­க­வில்லை என்­பது விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.
குறித்த சிறு­மியர் சர்­வ­தேச பாட­சாலை ஒன்றில் கல்­வி­கற்று வரும் நிலையில், அவர்­களை பாட­சா­லைக்கு அழைத்துச் சென்று அழைத்து வரும் வாக­னத்தின் சார­தி­யா­கவும் குறித்த சந்­தேகநபரே செயற்­பட்­டுள்­ள­தாக ஆரம்­ப­கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
இந்த துஷ்­பி­ர­யோக சம்­ப­வத்­துக்கு சிறுவர் இல்ல காப்பாளரான பெண்ணின் தொடர் புகள் ஏதும் உள்ளதா எனவும் சிறுமியர் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளுக்கு உள் ளாக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் உறுதிசெய்ய மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups