இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு டிப்போக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை – கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி, பயணித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.