Home » » சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்டுள்ள 95 இலட்சம் ரூபா இயந்திரம்

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்டுள்ள 95 இலட்சம் ரூபா இயந்திரம்

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த மரம் அரியும் இயந்திரம் சாவகச்சேரி வனவளத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வளவளத் திணைக்களத்தின் அனுமதியின்றி, மரம் அரிவதற்கு பயன்படுத்தும் உயர் ரக தொழில்நுட்பம் வாய்ந்த 95 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் சாவகச்சேரி கச்சாய் பகுதியில், தனியார் காணியொன்றில், இன்றைய தினம் மரம் அரிந்து கொண்டிருந்த வேளை வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்களினால் விசேட அதிரடிப்படையினரது உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த இயந்திரத்தைப் பயன்படுத்திய சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups