Home » » வித்­தியா படு­கொலை வழக்கில் வந்த இடத்தில் சிக்கிய பொலி­ஸ் அதிகாரி!! பார்த்தால் திகைத்திடுவீர்கள்

வித்­தியா படு­கொலை வழக்கில் வந்த இடத்தில் சிக்கிய பொலி­ஸ் அதிகாரி!! பார்த்தால் திகைத்திடுவீர்கள்

பொலிஸ் அலு­வ­ல­கர் ஒரு­வ­ரின் ஒரு இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான கைக்­க­டி­காரத்­தைத் திரு­டி­னார் என்ற குற்­றச்­சாட்­டில் பொலிஸ் அதி­காரி ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் இன்று முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இது­தொ­டர்­பில் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது:
“ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றும் பொலிஸ் அதி­காரி, நேற்­று­முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் தலை­மைப் பொலிஸ் நிலை­யத்­துக்கு வருகை தந்­துள்­ளார்.
அவர் மாணவி வித்­தியா படு­கொலை வழக்கு விசா­ர­ணைக்­காக யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற தீர்ப்­பா­யத்­தில் முன்­னி­லை­யா­கவே வருகை தந்­துள்­ளார்.
ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றும் சிறு­குற்­றப்­பி­ரிவு பொலிஸ் அலு­வ­ல­ரின் கைக்­க­டி­கா­ரத்தை நேற்­று­முன்­தி­னம் காலை­யி­லி­ருந்து காண­வில்லை. அத­னால் பொலிஸ் அதி­கா­ரி­யின் அலை­பே­சிக்கு அழைப்­பெ­டுத்த பொலிஸ் அலு­வ­ல­கர், தனது கடி­கா­ரம் பற்றி கேட்­ட­போது, தான் அத­னைக் காண­வில்லை என்­றும் அதைப்­பற்றி தனக்கு தெரி­யாது என்­றும் அவர் பதி­ல­ளித்­துள்­ளார்.
இருந்­தும் சந்­தே­கம் கொண்ட பொலிஸ் அலு­வ­ல­கர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் தனது கைப்­பையை வைத்­து­விட்டு யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றுக்­குச் சென்ற பின்­னர், பொலிஸ் அதி­கா­ரி­யின் கைப்­பை­யைப் பரி­சோ­தனை செய்து பார்த்­துள்­ளார். அதற்­குள் அந்­தக் கைக்­க­டி­கா­ரம் இருந்­துள்­ளது.
இருந்­தும், அந்­தப் பொலிஸ் அதி­காரி நீதி­மன்­றில் இருந்து மாலை பொலிஸ் நிலை­யத்­துக்­குத் திரும்­பிய பின்­னர் பொலிஸ் தலை­மை­ய­கப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் முன்­னி­லை­யில் வைத்து பொலிஸ் அலு­வ­ல­கர், தனது கைக்­க­டி­கா­ரம் வெளி­நாட்­டி­லுள்ள உற­வி­னர் ஒரு­வர் அன்­ப­ளிக்­காக வழங்­கி­ய­தா­க­வும், அந்­தக் கைக்­க­டி­கா­ரத்தை கண்­டதா? என பொலிஸ் அதி­கா­ரி­யி­டம் கேட்­டுள்­ளார்.
“நான் எடுக்­க­வில்லை. வேண்­டும் என்­றால் எனது கைப்­பை­யைப் பரி­சோ­தனை செய்து பாருங்­கள். இருந்­தால் எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுங்­கள்” என்று பொறுப்­ப­தி­கா­ரி­யின் முன்­னி­லை­யில் அந்த அதி­காரி கூறி­யுள்­ளார்.
தலை­மைப் பொலிஸ் அதி­கா­ரிக்கு முன்­பாக மீண்­டும் அந்­தப் பொலிஸ் அதி­கா­ரி­யின் கைப்­பை­யைப் பார்த்த போது, அதற்­குள் கைக்­க­டி­கா­ரம் இருந்­துள்­ளது. உட­ன­டி­யாக பொலிஸ் அலு­வ­ல­கர் அந்­தப் பொலிஸ் அதி­கா­ரிக்கு எதி­ராக யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தார்.
அந்த முறைப்­பாட்­டின் பிர­கா­ரம் இன்று வியா­ழக்­கி­ழமை பொலிஸ் அதி­காரி யாழ்ப்­பா­ணம் நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் – என்­ற­னர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups