பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது அனைத்து நெட்டிசன்களும் கிடைத்த நல்ல விருந்து.
தினமும் ஏதாவது ஒரு பரபரப்பு கிளம்பிக்கொண்டுதான் இருக்கிறது. நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சில விஷயங்களை கட் செய்து அவர்களுடைய வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருந்தனர்.
அந்த வீடியோவில், காயத்ரி, ரைசா, ஜுலி மூவரும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடினர். காயத்ரி தான் கண்டுபிடிக்கவேண்டும். அப்போது ரைசா தோட்டத்திலிருந்து படுக்கையறைக்கு ஓடிவந்து கட்டிலின் அடியில் உள்ள பெட்டியில் ஒளிந்து கொண்டார்.
ஓவியாவை அதை மூடிவிட சொன்னார். மூடிட்டு போ என்று கூறியுள்ளார். ஓவியாவுக்கோ யார் கண்டுபிடிக்க போகிறார்கள் என்பது தெரியாமல் அந்த பெட்டியை பிடித்துக்கொண்டே நின்றார்.
எனவே காயத்ரி எளிதாக ரைசாவை பிடித்துவிட்டார். இதனால் கோபமான ரைசா உன்னை கொல்லப்போகிறேன் பார் என்று ஓவியாவை திட்டினார். நீதானே சொன்னே மூடிட்டு இருனு அதான் பிடித்துக்கொண்டே நின்றேன் என்றார்.