Home » » இலங்கையில் கணவனை வேறு பெண்ணுடன் நள்ளிரவில் பிடித்த மனைவி செய்த காரியம்

இலங்கையில் கணவனை வேறு பெண்ணுடன் நள்ளிரவில் பிடித்த மனைவி செய்த காரியம்

தவ­றான தொடர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் வீட்டில் அவ­ருடன் சல்­லா­பத்தில் ஈடு­பட்­டி­ருந்த பஸ் சார­தியைத் தேடி வந்த அவ­ரது மனை­வியும் இரு பிள்­ளை­களும் சார­தி­யையும் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணையும் தாக்கி பெண்ணின் நாலரை அடி நீள­மான தலை­ம­யிரை வெட்டி எறிந்­துள்ள சம்­ப­வ மொன்று இடம்பெற்றதாக கொச்­சிக்­கடை பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.
நள்­ளி­ரவில் ஜா–எல, வஹ­தி­ய­கம என்ற இடத்­தி­லுள்ள வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பலாத்­கா­ர­மாக உள்­நு­ழைந்த சார­தியின் மனை­வியும் அவ­ரது பிள்­ளை­களும் சார­தி­யையும் அவர் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணையும் தாக்கி அவ­ரது நாலரை அடி நீள­மான தலை ­ம­யிரை வெட்டி எறிந்­துள்­ளனர்.
இத­ற்கும் மேல­தி­க­மாக அவர்கள் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் வீட்­டி­லுள்ள பொருட்­களை அடித்து நொறுக்­கி­யமை, கதவை உடைத்து பலாத்­கா­ர­மாக உள்­நு­ழைந்­தமை, பெண்ணின் தலை­ம­யிரை வெட்­டி­யமை ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக கட்­டான கிழக்கைச் சேர்ந்த சார­தியின் மனை­வி­யையும் இரு பிள்­ளை­க­ளையும் கொச்­சிக்­கடை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.
இச் சம்­ப­வத்­துடன் பிர­தா­ன­மாக தொடர்­பு­டைய 42 வய­தான தனியார் பஸ் சாரதி தனது மனைவி இருக்கும் போதே 32 வய­தான அழ­கிய திரு­ம­ண­மான பெண்­ணுடன் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்­துள்ளார்.
இக்­கள்ளத் தொடர்பை நிறுத்­தும்­படி சார­தியின் மனைவி தனது கண­வ­ரி­டமும் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்­ணி­டமும் அவ்­வப்­போது வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
இருந்தும் எச்­ச­ரிக்­கையைப் பொருட்­ப­டுத்­தாமல் தொடர்ந்து உல்­லாசம் அனு­ப­வித்து வந்­துள்­ளனர். சம்­பவ தினத்­தன்று சாரதி சுற்­றுலா பய­ண­மொன்று செல்­வ­தாகக் கூறி வீட்டை விட்டுச் சென்­றுள்ளார்.
இருந்தும் இது தொடர்­பாக சந்­தேகம் கொண்ட மனைவி தனது இரு பிள்­ளை­க­ளுடன் நள்­ளி­ரவு 2.00 மணி­ய­ளவில் கள்ளத் தொடர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் வீட்டுக் கதவை பலாத்­கா­ர­மாக உடைத்து உள்­நு­ழைந்த மனைவி மேற்­படி களே­ப­ரத்தில் ஈடு­பட்­டுள்ளார்.
சந்­தேக நபர்­களை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது கள்­ளத்­தொ­டர்பு வைத்­தி­ருந்த பெண்ணின் தலைமயிரை வெட்டியதற்காக 14000 ரூபா நஷ்டஈடு வழங்க சந்தேக நபர்கள் முன்வந்தனர். இருந்தும் மனைவியையும் இரு பிள்ளைகளையும் தலா ஒரு இலட்ச ரூபா பிணையில் செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups