Home » » வித்தியா படுகொலையில் யாரும் எதிர் பாராத தடயம்

வித்தியா படுகொலையில் யாரும் எதிர் பாராத தடயம்

“புங்குடுதீவு மாணவி சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் அவர் மீதான குற்றச்செயல் இடம்பெறவில்லை. அவர் கடினமான தரைப்பகுதியில் (சிமெந்திலான தரை போன்ற) வைத்தே கூட்டு வன்புண்வுக்குட்படுத்தியுள் ளமை அவரின் உடலில் காணப்பட்ட அடையாளங்களை வைத்து உறுதியாகக் கூற முடியும்” இவ்வாறு நிபுணத்துவ சாட்சியமளித்த சட்ட மருத்துவ அதிகாரி உருத்திர பசுபதி மயூரதன் தீர்ப்பாயத்திடம் நேற்றுச் சாட்சியமளித்தார்.
வழக்குத் தொடுனர் தரப்பால் இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட முக்கிய 2 சாட்சிகளால் கூறப்பட்ட பாழடைந்த வீட்டில் வைத்தே மாணவி வன்புணரப்பட்டார் என்பதை உறுதி செய்யும் வகையில் சட்ட மருத்துவ அதிகாரியின் நிபுணத்துவ சாட்சியம் அமைந்தது.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கோரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தின் 6ஆம் நாள் அமர்வு நேற்றுக் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடியது.
வழக்குத் தொடுனர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி. குமாரரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய 9 எதிரிகளும் தீர்ப்பாயத்திடம் முற்படுத்தப்பட்டனர்.
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் மகிந்த ஜெயவர்த்தன , எம். என். நிஷாந்த, சரங்க பாலசிங்க ஆகியோரும் 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
அத்துடன் 8ஆம் எதிரி சார்பிலும் தீர்ப்பாயத்தால் 1 தொடக்கம் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலையாகியிருந்தார்.
தடயவியல் பொலிஸ் அலுவலகர் சாட்சியம்
இந்த வழக்கின் 22ஆவது சாட்சியமான யாழ்ப்பாண பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் ரொஷான் சந்தனகுமார சாட்சியமளித்தார், “தடயவியல் பிரிவில் எனது பணியானது குற்ற செயல்கள் நடைபெற்ற இடங்கள், அதனோடு சந்தேகப்படக் கூடிய இடங்களுக்குச் சென்று அதனை அவதானித்து , விஞ்ஞான , தொழிநுட்ப ரீதியிலான சாட்சியங்கள் சான்று பொருள்களை சேகரிப்பதாகும்.
2015.05.14 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் கிடப்பதாகவும், அது தொடர்பில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள வருமாறு எமது பிரிவுக்கு அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் தெரியப்படுத்தப்பட்டு நாம் அந்த இடத்துக்குச் சென்றிருந்தோம்.
சடலம் இருந்த பகுதியானது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். ஒரு பாழடைந்த வீட்டின் பின் பகுதியில்தான் சடலம் கிடந்தது. சடலம் கிடந்த இடத்துக்கு நாம் நிமிர்ந்த நிலையில் செல்ல முடியாத அளவுக்கு அலரி மரங்களும் பூவரசு மரங்களும் காணப்பட்டன.
என்னுடன் வந்த எனது சக உத்தியோகத்தர்களுடன் சூழலை அவதானித்தேன். என்னுடன் வந்த சக உத்தியோகத்தர் ஒளிப்படங்களை எடுத்தார். பின்னர் சட்ட மருத்துவ அதிகாரி அந்த இடத்துக்கு வந்த பின்னர் சடலத்தை பார்வையிட்டோம்.
சடலத்தின் மூக்கால் குருதி வடிந்து உறைந்து காணப்பட்டது. இடது பக்கக் காதுப் பக்கமாகவும் குருதி வடிந்து உறைந்து காணப்பட்டது. இடது பக்க கண் பகுதியிலும் ஏதோ ஒரு திரவம் காணப்பட்டது. இரு முடிகளை மீட்டேன்.
சடலத்தில் மேலும் அவதானித்த போது அதன் மேல் பகுதியில் முடி இரண்டு இருந்தன. அவற்றைச் சேகரித்துக் கொண்டேன். பின்னர் சடலம் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களை அவிழ்க்க முடியாது இருந்தமையால், அவற்றை பிலேட்டினால் வெட்டி அகற்றினேன். பின்னர் சடலத்தைத் திருப்பி பார்த்த போது உடலின் பின் பகுதியில் இடுப்பு பக்கத்தில் உராய்வுக் காயங்கள் இருந்தன.
அதன் பின்னர் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் நிலத்தைப் பரிசோதித்தோம். சந்தேகத்துக்கிடமான எந்தத் தடயப் பொருள்களையும் மீட்கவில்லை.
பின்னர் சட்ட மருத்துவ அதிகாரி கொண்டு வந்த வெள்ளை நிற பையில் சடலத்தை பொதி செய்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்தோம்” என்று தடயவியல் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியமளித்தார்.
சடலத்தில் இருந்து மீட்கபட்ட இரண்டு முடிகளையும் என்ன செய்தீர்கள்? என பிரதி மன்றாடியார் அதிபதி கேட்ட போது, அதனை ஊர்காவற்றுறை நீதிவானின் உத்தரவின் பேரில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்தேன் என சாட்சி பதிலளித்தார்.
ஆய்வு அறிக்கைகள் திறக்கப்பட்டன
அதனை அடுத்து பிரதி மன்றாடியார் அதிபதி ஜின்டேக் நிறுவனத்தால் மன்றுக்கு பாரப்படுத்தப்பட்ட மரபணுப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆய்வு அறிக்கைகள் உள்ளடங்கிய பொதியை திறந்த மன்றில் பார்க்க அனுமதி கோரினார். அதற்கு தீர்ப்பாயம் அனுமதித்ததையடுத்து பொதி திறக்கப்பட்டது.
அந்தப் பொதியில் இருந்து மாணவியின் சடலத்தில் இருந்து மீட்கப்பட்ட முடி அனுப்பட்ட உறையை சாட்சியத்திடம் காண்பித்த போது, அதில் தான் எழுதிய தகவல்கள் உள்ளன என சாட்சி அந்த உறையை அடையாளம் காட்டினார்.
எதிரி தரப்பு சட்டத்தரணிகளுக்கு அறிக்கைகளின் பிரதி கையளிப்பு
அதனையடுத்து எதிரி தரப்புச் சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன, ஜின் டேக் நிறுவன அறிக்கையின் பிரதிகள் தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அதனை வழங்க வேண்டும் என மன்றில் கோரினார். அந்த அறிக்கைகள் வழக்கின் மூல கோவையில் இணைக்கப்பட்டுள்ளதால் அதனை எதிர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்க முடியவில்லை. இன்றைய தினம் அந்த அறிக்கைகளின் பிரதிகளை எதிரி தரப்பு சட்டத்தரணிகளுக்கு வழங்கப்படும் என தீர்ப்பாயம் தெரிவித்தது.
அதனை அடுத்து சாட்சியத்திடம் எதிரி தரப்பு சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணையின் செய்தார்.
நீர் எத்தனை தடவைகள் இந்த வழக்கு தொடர்பில் களப் பரிசோதனை செய்ய குற்றச்செயல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்றீர்? என சாட்சியிடம் கேட்டார். இரண்டு தடவைகள் என சாட்சி பதிலளித்தார். அங்கு சென்ற திகதிகளைக் குறிப்பட முடியுமா ? என சட்டத்தரணி கேட்டார். சடலம் கண்டெடுக்கப்பட்ட தினமான 14ஆம் திகதியும் பின்னர் 19ஆம் திகதியும் சென்றேன் என சாட்சி பதிலளித்தார்.
19ஆம் திகதி மீண்டும் ஏன் அங்கு சென்றீர்? என சட்டத்தரணி கேட்டார். “கைது செய்யபப்ட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மாணவியை பிறிதொரு இடத்தில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்கள் என ஊர்காவற்றுறை பொலிஸார் எமது பிரிவுக்கு அறிவித்தனர்.
அதனால் நாம் 19ஆம் திகதி சந்தேகநபர்கள் கூறிய இடம் என ஊர்காவற்றுறை பொலிஸாரால் காண்பிக்கப்பட்ட இடத்தை பரிசோதனை செய்தோம்.
அங்கு ஏதேனும் தடயப் பொருள்களை சேகரித்தீர்களா ? என சட்டத்தரணி கேட்டதற்கு, அன்றைய தினம் 19ஆம் திகதி நான் உதவிக்கு சென்று இருந்தேன். “அன்றைய தினம் தடயப் பொருள்களை சேகரித்தது என்னுடன் வந்த பிறிதொரு உத்தியோகத்தர் ஆவார்” என சாட்சி பதிலளித்தார்.
அத்துடன் தடயவியல் பொலிஸ் உத்தியோகத்தரின் சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
காலை களத்­தில் பரி­சோ­தனை மாலை உடற்­கூற்­றுச் சோதனை
வழக்­கின் 23ஆவது சாட்­சி­ய­மான சட்ட மருத்­துவ அதி­காரி உருத்­திர பசு­பதி மயூ­ர­தன் நிபு­ணத்­துவ சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­பட்­டார்.
ஊர்­கா­வற்­றுறை நீதி­வா­னின் அழைப்­பின் பேரில் களப் பரி­சோ­த­னைக்­காக சட­லம் மீட்­கப்­பட்ட இடத்­துக்கு 2015ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி காலை 10 .30 மணி­ய­ள­வில் சென்­றேன்.
சட­லத்தை அவ­தா­னித்த போது, இரண்டு கைக­ளின் பெரு­வி­ரல்­க­ளும் ஒன்­றாக சேர்த்­துக் கட்­டப்­பட்டு தலை­யில் பின் பகு­தி­யில் கட்­டப்­பட்­டி­ருந்­தது. கால்­கள் இரண்­டும் 180 பாகைக்­கும் அதி­க­மாக விரித்து கட்­டப்­பட்டு இருந்­தது. கண்­கள் வீங்கி இருந்­தன. காதின் ஒரு பகுதி மூக்கு போன்ற இடத்­தில் இருந்து குரு­திக் கசி­வு­கள் காணப்­பட்­டன. வாய்க்­குள் உள்­ளாடை திணிக்­கப்­பட்டு இருந்­தது.
பின்­னர் சட­லத்­தின் கட்­டுக்­களை தட­ய­வி­யல் பிரி­வி­ன­ரின் உத­வி­யு­டன் அவிழ்த்­தேன். அப்­போது சட­லத்­தின் கழுத்து பகு­தி­யில் பாட­சாலை கழுத்­துப்­பட்­டி­யால் கழுத்து இறுக்கி கட்­ட­பட்டு நிலத்­தில் இருந்து சுமார் இரண்டு அடி உய­ரத்­தில் உள்ள மரத்­தில் கட்­டப்­பட்டு இருந்­தது. அந்­தக் கட்­டு­க­ளி­லி­ருந்து விடு­வித்து சட­லத்­தைத் திருப்பி பார்த்த போது பிட்ட பகு­தி­யில் காயங்­கள் இருந்­த­மையை அவ­தா­னித்­தேன்.
அதன் பின்­னர் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு சட­லத்தை எடுத்து வந்­தோம். அன்­றைய தினம் (14 ஆம் திகதி ) மாலை 5 மணி­ய­ள­வில் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னையை மேற்­கொண்­டேன்.
சட­லத்­தில் 8 காயங்­கள்
சட­லத்­தில் 8 காயங்­களை அவ­தா­னித்­தேன். தலை­யின் வலது பகு­தி­யில் தோள் பக்­கத்­துக்கு மேல் பகு­தி­யில் ஒரு காயம் காணப்­பட்­டது. மண்­டை­யோட்­டில் உள்ள எழும்­பு­கள் முறி­ய­வில்லை. குரு­திக் கசி­வு­கள் ஏற்­பட்டு இருந்­தன.
மொட்­டை­யான விசை பாவிக்க்­கப்­ப­டும் போதோ அல்­லது தட்­டை­யான கடி­ன­மான (தார் வீதி­கள் அல்­லது சீமெந்து பூச­பப்ட்ட சமாந்­த­ர­மான நிலம் போன்ற) இடத்­தில் தலை தாக்­கப்­ப­டும் போதோ அவ்­வா­றன காயம் ஏற்­ப­ட­லாம். விழுந்து இருந்­தால் மண்­டை­யோடு உடைந்து இருக்­கும். இது தாக்­கப்­பட்ட காய­மா­கவே இருக்­கும்” என்று சாட்­சி­ய­ம­ளித்­தார்.
இரண்­டா­வது காயம் தலை­யின் உச்சி பகு­தி­யில் 7 இடங்­க­ளில் காணப்­பட்­டன. இவை பெரும்­பா­லும் தலை­மு­டியை அதிக விசை­யைக் கொண்டு இழுக்­கும் போது ஏற்­பட்டு இருக்க கூடிய காயங்­க­ளா­கும். மூன்­றா­வது காயம் வலது பக்க கன்­னத்­தில் ஏற்­பட்ட கண்­டல் காயம். இது தக்­கப்­பட்­ட­தாலோ அல்­லது அதிக விசை கொண்டு அழுத்­தி­ய­தாலோ ஏற்­பட்டு இருக்­க­லாம்.
நான்­கா­வது மேல் உதட்­டின் உட்­பு­றம் ஏற்­பட்ட கண்­டல் காயம். இது தாக்­கப்­பட்­ட­தாலோ அல்­லது அதிக அழுத்­தம் கொடுத்­த­மை­யாலோ ஏற்­பட்ட காய­மாக இருக்­க­லாம். ஐந்­தா­வது காயம் கழுத்­துப் பட்­டி­யால் கழுத்தை இறுக்­கி­ய­மை­யால் கழுத்­தைச் சுற்றி கண்­டல் காயம் ஏற்­பட்­டுள்­ளது.
ஆறா­வது காயம் கண்­டல் காயம். இது இடுப்பு பகு­தி­யின் பின்­பு­ற­மாக வலது பக்க இடுப்பு பகு­தி­யில் காணப்­ப­டு­கின்­றது. இது மென்­மை­யா­கத் தாக்­கும் போது ஏற்­ப­டும் காய­மா­கும். ஏழா­வது உராய்­வுக் காயம் வலது பிட்­டத்­தில் காணப்­பட்­டது.
எட்­டா­வது காயம் வலது காலில் கணுக்­கா­லுக்­குச் சற்று மேல் முள் குத்­திய காயம். அந்த காயத்­தி­னுள் முள் ஒன்று முறிந்த நிலை­யில் கிடந்­தது. கண் மூடி இருந்­தது. மூடிய கண்­ணைத் திறந்து பார்த்த வேளை, கண்­ணுக்­குள் குரு­திக் கசிவு காணப்­பட்­டது. பெரும்­பா­லும் மூச்சு திண­ற­லால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பின் போது அவ்­வாறு கண்­ணில் குரு­திக் கசிவு ஏற்­ப­டச் சந்­தர்ப்­ப­முண்டு.
கூட்டு வன்­பு­ணர்வு
சட­லத்­தைச் சோத­னை­யிட்ட போது பலர் சேர்ந்து பல தட­வை­கள் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்தி உள்­ளார்­கள் என்­பது தெரி­ய­வந்­தது.
இரைப்­பை­யில் மஞ்­சள் நிற திர­வம் இருந்­தது. அது 100 மில்லி லீற்­றர் அள­வில் காணப்­பட்­டது. அதை வைத்து பார்க்­கும் போது உயி­ரி­ழப்­பா­னது தேநீர் குடித்து 2 மணி நேரத்­துக்­குள் சம்­ப­வித்­துள்­ளது எனும் முடி­வுக்கு வர­லாம்.
தட­யங்­கள் அழிய சந்­தர்ப்­பம் இருந்­தது
சட­லத்­தில் எறும்­பு­கள் மொய்த்­துக்­கொண்டு இருந்­த­மை­யால் , தட­யப் பொருள்­கள் அழி­வ­டை­யக் கூடிய சந்­தர்ப்­ப­மும் இருந்­துள்­ளது. அத்­து­டன் சட­லம் பழு­த­டை­யும் நிலைக்கு வந்து விட்­டது. அத­னா­லும் தட­யங்­கள் அழிந்து இருக்­க­லாம்.
சட­லம் கிடந்த இடத்­தில் குற்­றம் நடக்­க­வில்லை
சட­லம் கிடந்த இடத்­தில் வன்­பு­ணர்வு ஏற்­பட்­ட­வில்லை என அனு­மா­னிக்க முடி­யும். ஏனெ­னில் நான் சட­லத்­தைப் பாட்­வை­யிட்ட போது அதன் கீழ் பகு­தி­யின் நிலத்தை அவ­தா­னித்­தி­ருந்­தேன். அதன் போது நிலத்­தில் இருந்த சறு­கு­கள் மற்­றும் அந்த இடம் என்­பன சாத­ர­ண­மா­கவே இருந்­தது. பலர் சேர்ந்து பல தட­வை­கள் அந்த இடத்­தில் வைத்து வன்­பு­ணர்ந்து செய்­தி­ருந்­தால், அந்­தப் பகுதி சாதா­ர­ண­மாக இருக்­காது. அத­னால் சட­லம் கிடந்த இடத்­தில் வன்­பு­ணர்வு நடை­பெற்று இருக்க சாத்­தி­யம் குறைவு.
அத்­து­டன், மாணவி கடி­ன­மான இடத்­தில் வைத்தே வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார் என அவ­ரது உட­லில் காணப்­பட்ட காயங்­களை வைத்து உறு­திப்­ப­டுத்த முடி­யும்” என சட்ட மருத்­துவ நிபு­ணர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அடுத்த அமர்வு 18ஆம் திகதி
சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யின் சாட்­சி­யம் முடி­வு­றுத்­தப்­பட்­டது. அத­னை­ய­டுத்து, தீர்ப்­பா­யத்­தால் வழக்கு விசா­ரணை எதிர்­வ­ரும் 18ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அது­வ­ரை­யில் ஒன்­பது எதி­ரி­க­ளை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மா­றும் தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது.
அன்­றைய தினத்­தில் இருந்து ஜூலை மாதம் 19ஆம் , 20ஆம் , 24ஆம் , 25 ஆம், மற்­றும் 26ஆம் , ஆகிய தினங்­க­ளி­லும் பின்­னர் ஓகஸ்ட் 2ஆம் , 3ஆம், மற்­றும் 4ஆம் திக­தி­க­ளில் வழக்கு விசா­ர­ணை­கள் நடை­பெ­றும் என தீர்ப்­பா­யம் அறி­வித்­தது.

Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups