Home » » சனிக்கிழமை உண்மையில் நடந்தது என்ன?? அடித்துக் கூறும் இளஞ்­செ­ழி­யன்...

சனிக்கிழமை உண்மையில் நடந்தது என்ன?? அடித்துக் கூறும் இளஞ்­செ­ழி­யன்...

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் இலக்­குத் தான் தான் என்­பதை மீண்­டும் ஆணித்­த­ர­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன். நீதி­பதி தாக்­கு­தல் இலக்கு அல்ல, அது ஒரு தற்­செ­ய­லான சம்­ப­வம் என்று பொலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில் நீதி­பதி நேற்று மீண்­டும் தாக்­கு­த­லின் இலக்­குத் தானே என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­னார்.
சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் சரத் ஹேமச்­சந்­தி­ர­வின் இறு­திக் கிரி­யை­க­ளில் நீதி­பதி நேற்­றுக் கலந்­து­கொண்­டார். அப்­போது செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய அவர் தாக்­கு­தல் நடந்த விதம் குறித்து விளக்­கி­னார்.
அவர் தெரி­வித்­த­தா­வது:
நான் முத­லா­வது சாட்சி, பொலிஸ் கான்ஸ்­ட­பிள் விம­ல­ரத்ன இரண்­டா­வது சாட்சி, எனது சாரதி மூன்­றா­வது சாட்சி, தாக்­கு­த­லாளி தப்­பிச் செல்­வ­தற்­கா­கப் பறித்­துச் சென்ற மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்தி வந்­த­வர் நான்­கா­வது சாட்சி.
என்­னு­டைய மெய்ப்­பா­து­கா­வ­ல­ரின் இடுப்­பி­லி­ருந்து துப்­பாக்­கியை தாக்­கு­த­லாளி உரு­வி­ய­போது நான் கண்­டேன். உட­ன­டி­யா­கக் காரில் இருந்து இறங்கி வந்­தேன்.
அந்­த­நே­ரத்­தில் உப பரி­சோ­த­க­ரும் தாக்­கு­த­லா­ளி­யும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் பிடித்­த­படி இழு­ப­றிப்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர். கழுத்­தைப் பிடித்து இறுக்­கி­ய­ப­டி­யும் சட்­டை­யைப் பிடித்­தி­ழுத்­த­ப­டி­யும் அவர்­கள் காணப்­பட்­ட­போது தாக்­கு­த­லாளி தனது வலது கையை மேல் நோக்கி உயர்த்­திப் பிடித்­தி­ருந்­தார்.
அதி­லேயே துப்­பாக்கி இருந்­தது. அதைப் பார்த்­த­தும் நான் அவர்­க­ளுக்­குச் சற்­றுத் தூரத்­தில் இருந்­த­ப­டியே துப்­பாக்­கி­யைக் கீழே போடு என்று சத்­த­மிட்­டேன்.
அதன் பின்­னரே உப பரி­சோ­த­க­ரைத் தாக்­கு­த­லாளி தள்­ளி­விட்டு அவரை நோக்­கிச் சுட்­டார். பின்­னர் என்னை இலக்கு வைத்­துத் துப்­பாக்­கியை நீட்­டி­னார். அப்­போது எனது இரண்­டா­வது மெய்ப் பாது­கா­வ­லர் என் பின்­னால் நின்­றி­ருந்­தார்.
அவர் உட­ன­டி­யாக என்­னைக் காருக்­குள் தள்­ளி­விட்­டார். அதன் பின்­னரே தாக்­கு­த­லா­ளியை நோக்கி அவர் சுட்­டார்.
இவ்­வ­ள­வும் நடந்­தது கிட்­டத்­தட்ட 10 அடிச் சுற்று வட்­டா­ரத்­துக்­குள்­தான். நல்­லூர்ச் சந்தி அது. துர­திஸ்­ட­வ­ச­மாக அந்த நேரத்­தில் அந்த இடத்­தில் யாரும் இருக்­க­வில்லை.
பொலி­ஸார் அந்த இடத்­தில் பலர் இருந்­த­னர் என்று இப்­போது கூறு­கின்­றார்­கள். ஆனால் உண்­மை­யில் அப்­படி யாரும் இருக்­க­வில்லை. எனது இரண்டு மெய்ப் பாது­கா­வ­லர்­க­ளும் சூடு­பட்டு வீழ்ந்து கிடக்­கி­றார்­கள். அவர்­க­ளைத் தூக்கி ஏற்­று­வ­தற்கு உதவி செய்­யக்­கூட அங்கு யாரும் இருக்­க­வில்லை.
ஒரு நீதி­ப­தி­யா­கிய நானும் எனது சார­தி­யும்­தான் அவர்­க­ளைத் தூக்­கிக் காரில் போட்­டுக்­கொண்டு வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு சென்­றோம். போகும்­போதே பிர­திப் பொலிஸ்மா அதி­ப­ருக்­குச் சம்­ப­வம் குறித்­துத் தெரி­வித்­தேன். 11.30 மணி­வரை நான் வைத்­தி­ய­சா­லை­யில் இருந்­தேன். 12.20 மணி­ய­ள­வில் உப பரி­சோ­த­கர் உயி­ரி­ழந்­தார்.
இது­தான் அன்று உண்­மை­யில் நடந்­தது. நான் சொல்­வது உண்­மையா பொய்யா என்­ப­தற்கு அப்­பால் சம்­ப­வத்­தின் நேர­டி­யான முதல் சாட்சி நான். மேல் நீதி­மன்­றத்­தில் சாட்­சி­ய­ம­ளிக்­கத் தயா­ராக இருக்­கின்­றேன். பொலிஸ் பேச்­சா­ளர் இப்­ப­டிச் சொல்­வா­ராக இருந்­தால் இந்த வழக்­கி­லி­ருந்து நான் வில­கத் தயா­ராக இருக்­கின்­றேன்.
பேச்­சா­ளர் நீதி­மன்­றத்­துக்கு வந்து சாட்­சி­ய­ம­ளிக்­கட்­டும். சம்­ப­வம் தொடர்­பான விசா­ரணை ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவோ முதன்­மைச் சந்­தே­க­ந­பர் கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவோ எந்­த­வொரு கருத்­தை­யும் தெரி­விப்­ப­தற்­குப் பொலிஸ் பேச்­சா­ள­ருக்கு எந்­த­வொரு உரி­மை­யும் கிடை­யாது.
சந்­தேக நபர்­கள் என்­ன­வேண்­டு­மா­னா­லும் சொல்­வார்­கள்.
என்­னு­டைய மெய்ப்­பா­து­கா­வ­லர்­கள் மிக­வும் நல்­ல­வர்­கள். அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்­தல் ஏதும் இல்லை. அவர்­களை இலக்கு வைக்­க­வேண்­டிய தேவை ஏதும் இல்லை. அப்­படி யாழ்ப்­பாண மக்­கள் அவர்­களை வெறுத்­தி­ருந்­தால் ஏன் யாழ்.
பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உயி­ரி­ழந்த பொலிஸ் உப பரி­சோ­த­க­ருக்­காக விளக்­கேற்றி அஞ்­சலி செலுத்­தி­னார்­கள்? இலங்­கை­யின் வர­லாற்­றில் இப்­படி நடந்­தி­ருப்­பது இதுவே முதற்­ற­டவை.
நான் 20 வரு­டங்­க­ளாக நீதிச் சேவை­யில் இருக்­கின்­றேன். கிட்­டத்­தட்ட 1000 உயி­ரி­ழந்த உடல்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் நடத்­தி­யி­ருப்­பேன். யார், எப்­படி நடந்­து­கொள்­வார்­கள் என்­பது பற்றி எனக்­குத் தெரி­யும்.
தாக்­கு­த­லாளி உப பரி­சோ­த­க­ரி­டம் இருந்து துப்­பாக்­கி­யைப் பறித்­த­தும் உட­ன­டி­யா­கவே சுடு­கு­ழ­லுக்­குள் குண்டை ஏற்­றிச் சுட்­டார். நேர்த்­தி­யான தொழில் விற்­ப­னம் இல்­லாத ஒரு­வ­ரால் அவ்­வாறு இல­கு­வாக பிஸ்­ர­லைக் கையாண்­டி­ருக்க முடி­யாது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups