Home » » சிறுமியான மருமகளுக்கு முன்னாள் இராணுவ உறுப்பினன் செய்த கொடூரம்!

சிறுமியான மருமகளுக்கு முன்னாள் இராணுவ உறுப்பினன் செய்த கொடூரம்!

ஸ்ரீலங்காவின் சிலாபம் பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தனது மருமகளை (சகோதரியின் மகள்) பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குறித்த நபர் அடிக்கடி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று, எட்டு வயது நிரம்பிய சகோதரியின் மகளிடம் இவ்வாறு அத்துமீறி நடந்துகொண்டிருக்கின்றார். இந்த அத்துமீறலானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளின்மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவரைக் கண்டவுடன் மகள் பயத்துடன் வீட்டில் மறைந்து கொள்வதை அவதானித்த தாயார், அதற்கான காரணத்தை அவளிடம் கேட்டு அதிர்ந்து போய், சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து குறித்த நபரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups