Home » » மட்டுவில் பாரிய விபத்து

மட்டுவில் பாரிய விபத்து

மட்டக்களப்பு - வெல்லாவெளி பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோதுண்டு மோட்டார்சைக்கிள் வாகன சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மண்டூரைச் சேர்ந்த தங்கதுரை (வயது 38) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிபாலம் அருகே, இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெல்லாவெளி பொலிஸார் உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணையை வெல்லாவெளிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups