Home » » யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பெற்ற தாய் தலைமறைவு

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பெற்ற தாய் தலைமறைவு

குழந்­தை­யைப் பிர­ச­வித்த தாய், வைத்­தி­ய­சா­லையி லிருந்து வீடு செல்ல அனு மதிக்­கப்­பட்ட நிலை­யில், வைத்­தி­ய­சா­லை­யில் நின்றி ருந்த பெண்­ணி­டம் உடுப்­புப் பையை எடுத்­து­வ­ரு­கி­றேன் குழந்­தையை வைத்தி ருங்­கள் என்­று­கூ­றிச் சென்ற அவர் தலை­ம­றை­வா­னார்.
இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்பாணம் போதனா வைத்­திய சாலை­யில் நேற்­று­முன்தினம் இடம்­பெற்­றது.
இது குறித்து மேலும் தெரி­ய­வரு வதா­வது:
வைத்­தி­ய­சா­லை­யின் விடு­தி­யில் பிறந்து ஐந்தே நாள்­க­ளான குழந்­தையே இவ்­வாறு தாயா­ரால் விட்­டுச் செல்­லப்­பட்­டுள்­ளது. அவர் குழந்­தை­யைப் பிரச வித்து ஐந்து நாள்­க­ளாக வைத்­தி­ய­சா­லை­யின் விடு­தி­யில் தங்­கி­யி­ருந்­தார். நேற்­று­முன்­தி­னம் தாயும் குழந்­தை­யும் வீடு செல்ல அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.
வைத்­தி­ய­சா­லை­யின் சிற்­றுண்­டிச்­சா­ லைக்கு அண்­மை­யில் குறித்த தாய் நின்­றி­ருந்­த ­போது அரு­கில் நின்ற பெண்ணை உத­விக்கு அழைத்­துள்­ளார். குழந்தை பிர­ச­வித்த அந்­தத் தாயின் நிலை­மை­யைப் பார்த்து அரு­கில் நின்ற பெண் உதவி செய்­தார்.
தனது புடவை யுடன் கூடிய பொதியை வைத்­தி­ய­சாலை விடு­தி­யில் வைத்­து­விட்டு வந்­துள்­ளேன். அங்கு சென்று அதனை எடுத்து வரு­கி­றேன். அது வரை இந்­தக் குழந்­தையை வைத்­தி­ருங்­கள் என்­று­கூ­றித் தான் பெற்ற குழந்­தையை அங்கு நின்ற பெண்­ணி­டம் கொடுத்­து­விட்­டுத் தாயார் சென்­றுள்­ளார்.
பின்­னர் அவர்­தி­ரும்பி வரவே யில்லை. குறித்த தாய் நெடு­நே­ர­மா­கி­யும் திரும்பி வரா­த­த­ால் சந்­தே­கம் கொண்ட பெண் அது தொடர்­பில் அங்கு நின்­ற­வர்­க­ ளி­டம் உதவி செய்த பெண் சம்பவத்தை விப­ரித்துள் ளார். அது தொடர்­பில் வைத்­தியசாலை அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. தேடு­தல் நடத்­தி­யும் குறித்த தாயைக் காண­வில்லை.
அதன்­பின்­னர் குறித்த குழந்­தையை வைத்­திய சாலைத் தரப்­பி­னர், புதி­தா­கப் பிறந்த குழந்­தை­களை வைத்­தி­ருக்­கும் பகு­தி­யில் வைத்­தி­ருக்­கின்­ற­னர்.
இது தொடர்­பில் யாழ்ப்பா ணப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­யப்ப ட்டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்ப ட்டது. போதனா வைத்­திய சாலை­யில் சில தினங்களுக்கு முன்­னர் கண­வனை இழந்த பெண் ஒரு­வர் பிரச வத்­துக்­காக விடு­தி­யில் தங்கியுள்­ளார்.
அந்­தப் பெண் இவ்­வாறு செய்­தி­ருக்­க­லாம் என்­றும் சந்­தே­கம் தெரிவிக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் ஆராய்ந்த பின்­னர் மேல­திக விட­யங்க ளைக் கூற­மு­டி­யும் என்று வைத்­தி­ய­சா­லைப் பணிப்பாளர் தெரி­வித்­தார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups