Home » » குருணாகலில் ஆயுதங்கள் மீட்பு!

குருணாகலில் ஆயுதங்கள் மீட்பு!

குருணாகல் மாவட்டத்தின் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொபட் ஹில் தோட்டத்திலுள்ள பங்களா ஒன்றின் உட்கூரைக்குள் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் உள்ளிட்ட கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்டுள்ளனர்.
தோட்ட உரிமையாளரினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, 3 கைக்குண்டுகள், ரீ-56 ரக தோட்டாக்கள்-67, 4 மெகசீன்கள், மற்றைய துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 133 தோட்டாக்கள், பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் 156 தோட்டாக்கள் மற்றும் இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் மற்றைய சில உபகரணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தான் வெளிநாட்டில் இருந்து வந்ததாகவும் விடுமுறை நாட்களில் மாத்திரம், தோட்ட பங்களாவில் வந்து இருப்பதாகவும், தோட்ட உரிமையாளர் கூறியுள்ளார். தன்னுடைய பங்களா சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வேறு சிலரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வர்த்தகர் ஒருவரும் அவருடைய மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள், இந்த ஆயுதங்களை பங்களாவில் ஒளித்து வைத்திருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups