Home » » தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்

தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்

மின்னேரிய மஹரத்மலே பிரதேசத்தில் தாயின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தினுஷ ஏரங்க பண்டார எனும் 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் மற்றும் மனைவியை கைவிட்டு சில மாதங்களுக்கு முன்னர் சிறுவனின் தந்தை பிரிந்து சென்றுள்ளார்.
அதன்பின்னர், சிறுவனின் தாய் மற்றுமொரு ஆணுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த நபரால் தொடர்ந்தும் சிறுவன் தாக்கப்பட்டு வந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல், தாயின் கள்ள காதலனின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவன், வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீதியில் சென்றுள்ளான்.
அதனை அவதானித்த அயலவர்கள், சிறுவனை மீட்டு, அவரது வீட்டில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த சிறுவனின் உடலம், ஹிங்குராங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாக தாயின் கள்ளக் காதலளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups