Home » » பெரிய உடம்புக்கு ஆசைப்பட்டு , மாத்திரைகளை விழுங்கும் பெண்கள்

பெரிய உடம்புக்கு ஆசைப்பட்டு , மாத்திரைகளை விழுங்கும் பெண்கள்

எடை கூடும் மோகத்தில் பெண்கள் , மாத்திரைகளை விழுங்கும் அவலம் ஆபிரிக்க நாடான சூடானில் அரங்கேறி வருகின்றது .
இங்குள்ள பல இளம்பெண்கள் , உடலில் எடை கூடி “அழகான “ தோற்றம் பெற , பயிற்சி பெறாத மருந்து விற்பனையாளர்களிடமிருந்து , மாத்திரைகளை வாங்குவது இங்கு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன .
மருந்தகங்களில் குண்டாக்க வைக்கும் மாத்திரைகள் சட்டரீதியற்ற முறையில் விற்பனையாகி வருகின்றன .
சிரிய பைகளிலோஅல்லது இனிப்பு டப்பாக்களிலோ வைத்து கொடுக்கபப்டும் இந்த மாத்திரைகள் பற்றிய எந்த அறிவுறுத்தல்களும் கொடுக்கப்படுவதில்லை .
இந்த மாத்திரைகளை எத்தனை இளம் பெண்கள் எடுத்து வருகின்றார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது . காரணம் எந்த இளம் பெண்ணும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதுதான் .
இனிப்பு மிட்டாய்களைப் போல் கிராமங்களில் இது கொடுக்கப்பட்டு வருகின்றது என்கிறார் ஒரு பல்கலைக் கழக மாணவி .
பின்புறம் பருக்கவேண்டுமேன்ற ஆசையில் பல மாத்திரைகளை விழுங்கி , இரத்த நாளங்கள் தடைப்பட்டு எனது மாமியார் , சிறுநீரகம் ஏறத்தாழ செயலிழக்கும் நிலையில் இருப்பதாக இன்னொருவர் கூறி இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups