Home » » மடு திருத்தலத்தில் யாத்திரிகர்களுக்கிடையில் மோதல்!

மடு திருத்தலத்தில் யாத்திரிகர்களுக்கிடையில் மோதல்!

மடு திருத்தலத்தில் தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ்,சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மன்னார் மறை மாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
மடு திருவிழாவிற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்ததோடு அதிகளவான பக்தர்கள் தற்காலிக குடிசைகளை அமைந்து அங்கு தங்கி வந்தனர்.
இந்த நிலையில் இன்று (2) ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் சிலாபம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக கேட்டமையினால் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன் போது யாழ்ப்பாணம் மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.-
மோதலில் ஈடுபட்ட சிலர் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக விரைந்து செயற்பட்ட மடு பொலிஸார் யாழ்ப்பாணம் மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர்.
தற்போது மடு பகுதியில் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக மடுவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups