Home » » தங்க விற்­பனை நிலை­யத்­துக்கு குடும்­ப­மாக சென்று திரு­டிய குழு­வினர்..!

தங்க விற்­பனை நிலை­யத்­துக்கு குடும்­ப­மாக சென்று திரு­டிய குழு­வினர்..!

நீர்கொழும்பு கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நகை விற்­பனை நிலையம் ஒன்றில் ஆறு இலட்சம் ரூபா­வுக்கு மேல் பெறு­ம­தி­யான 13 பவுண் தங்க நகை­களை கொள்­வ­னவு செய்­வது போன்று அங்கு வருகை தந்த நால்வர் அடங்­கிய குழு திருடிச் சென்­றுள்­ளது.
சம்­பவம் இடம்­பெற்ற அன்று குறித்த நகைக் கடைக்கு ஆண் ஒரு­வரும் மூன்று பெண்­களும் நகைகள் வாங்­கு­வது போன்று வந்­துள்­ளனர். அவர்­களில் 13 மற்றும் 18 வய­தான இரு பெண்கள் அடங்­கி­யி­ருந்­தனர்.
இவர்­க­ளுடன் வருகை தந்த ஆண் கடையில் இருந்த நகைப் பெட்­டியை திருடி தான் அணிந்­தி­ருந்த சாரத்­துக்குள் மறைத்து வைக்கும் காட்சி அங்கு பொருத்­தப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்பு கெம­ராவில் தெளி­வாக பதி­வா­கி­யுள்­ளது.
சம்­பவம் இடம்­பெற்ற வெள்­ளிக்­கி­ழமை இரவு கடை­யி­லி­ருந்த நகை­களின் இருப்பை உரி­மை­யாளர் பார்த்த போதே நகைகள் திரு­டப்­பட்ட விடயம் தெரிய வந்­துள்­ளது.
இவர்கள் அனை­வரும் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள் போன்றே காணப்­பட்­டனர். அவர்­களில் பெண் நகை­களை வாங்­கு­வது போன்று அவற்றைப் பார்­வை­யிட்­டுள்ளார். அவர்களுடன் வந்த ஆண் இதன்­போது நகைகள் அடங்­கிய பெட்­டியைத் திருடி தான் அணிந்து வந்த சாரத்­துக்குள் மறைத்து வைத்­துள்ளார்.
அவர்­க­ளுடன் கூட வந்த இரு சிறு­மி­யர்­களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்­கு­வ­தற்­காக திரு­டு­வதை காணாமல் இருக்கும் வகையில் சூழ்ந்து நின்­றுள்­ளனர்.
பின்னர் அவர்கள் எந்­த­வித நகை­க­ளையும் கொள்­வ­னவு செய்யாமல் மாலை 5.12 மணி­ய­ளவில் கடை­யி­லி­ருந்து வெளியே­றி­யுள்­ளனர். இவைகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.­ரி.வி. கம­ராவில் தெளி­வாக பதிவாகியுள்­ளது.
இந்தச் சம்­பவம் தொடர்­பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups