முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
வான்கேராய்: வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல்நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்த போட்டியில் களமிறங்கினார். நியூசிலாந்து பந்துவீச்சில் வெஸ்ட்இண்டீஸ் அணி சிறிய இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 76, ரோவன் பவல் 59 ரன்களை எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் 22 ரன்களில் வெளியேறினார். நியூசிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய பிரேஸ்வெல் 4, ஆஸ்டில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 249 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. வெஸ்ட்இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட நியூசிலாந்து அணி 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிறகு 246 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜார்ஜ் வொர்கர் 57, ராஸ் டெய்லர், மன்ரோ ஆகியோர் தலா 49 ரன்களை எடுத்தனர். 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.