இச் சம்பவம் இன்று நண்பகல் 12.20 மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
4 ஆண் தொழிலாளா்களும் ஒரு பெண் தொழிலாளியும் இவ்வாறு சிறுத்தை தாக்குலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தேயிலை மலையில் பதுங்கியிருந்த சிறுத்தையை ஆண் ஒருவா் தாக்க முற்பட்டபோதே சிறுத்தை தொழிலாளா்களை தாக்கியதாக பொலிஸாாின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தோட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மடக்கிபிடித்த சிறுத்தையை வனவிலங்கு காாியாலயத்திற்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை ஹட்டன் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.