Home » , » இலங்கை அரசின் காரணங்களை நம்ப வேண்டாம் ; 26 நாடுகளின் பிரதிநிதிகளிடம் த. தே. கூ. வலியுறுத்தல்

இலங்கை அரசின் காரணங்களை நம்ப வேண்டாம் ; 26 நாடுகளின் பிரதிநிதிகளிடம் த. தே. கூ. வலியுறுத்தல்

Related imageஉள்­ளூ­ராட்சி தேர்­தல்­களின் பெறு­பே­றுகள்  தேசிய அர­சாங்­கத்­திற்குள்  ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை காரண மாகக் கொண்டு, இலங்கை அர­சாங்­கத்­தினால் ஜெனி­வா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து பின்­வாங்க முடி­யாது அர­சாங்கம் அவ்­வாறு செயற்­ப­டு­வ­தற்கு முற்­பட்டு கார­ணங்­களை முன்­வைக்கும் பட்­சத்தில் அதனை ஜெனி­வாவின் உறுப்பு நாடுகள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என வலி­யு­றுத்­தி­யுள்ள தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இலங்­கையின் தேசிய அர­சியல் நில­வ­ரங்கள் எவ்­வா­றா­க­வி­ருப்­பினும் வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்து நழு­விச்­செல்ல முடி­யாது என்­பதை உறுப்பு நாடுகள் அழுத்­தத்­து­ட­னான வலி­யு­றுத்­தல்­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் ஜெனி­வாவில் கோரிக்­கை­ வி­டுத்­துள்­ளது. 
 
ஜெனி­வாவின் பிரித்­தா­னிய மிஷன் பணி­ம­னையில் நேற்று வெ ள்ளிக்­கி­ழமை காலை இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வை­யிலும்  உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ரு­ட­னான சந்­திப்­பின்­போ­துமே கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன்  இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்ளார்.
26 நாடு­களைச் சேர்ந்த 40 உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது சுமந்­திரன் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
2015 ஆம் ஆண்டில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை இலங்கை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. எனினும்  சில­வி­ட­யங்­களைத் தவிர பல விட­யங்கள் இதுவரை நடை­மு­றைக்கு வர­வில்லை. குறிப்­பாக காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­போதும் அது நடை­மு­றைக்கு வராத நிலை காணப்­ப­டு­கின்­றது.
அர­சாங்­கத்தின் நகர்­வுகள் வேக­மாக இல்லை என்­பது தெளிவாகத் தெரி­கின்­றது.
அர­சாங்­கத்தின் சார்பில் இங்கு வரு­கின்ற பிர­தி­நி­திகள் பல்­வேறு கதை­களை கூற­மு­டியும். உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­களின் நம்­பிக்­கையை வெல்­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக கூற­வும்­மு­டியும். குறிப்­பாக அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ணிகள் நல்­லி­ணக்க நகர்­வுகள் குறித்து பிரஸ்­தா­பிக்க முடியும். எனினும் இவற்றில் எந்த முன்­னேற்­றமும் இல்லை. தற்­போது இலங்­கையில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் அர­சாங்­கத்­திற்கு பாரிய நெருக்­க­டி­க­ளை­கொ­டுத்­துள்­ளது. ஆகவே கடந்த காலங்­களில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் இது ­வ­ரையில் நிறை­வேற்­றப்­ப­டாமை தொடர்­பிலும் தற்­போ­தைய தேர்தல் முடி­வு­களால் அதனை தொட­ர 
மு­டி­யாத நிலை ஏற்­ப­டக்­கூடும் என்றும் பல்­வேறு கார­ணங்­களை உறுப்பு நாடு­க­ளுக்கு
வழங்­கக்­கூடும். இவற்றை உறுப்பு நாடுகள் மற்றும் ஜெனிவாப் பேரவை ஏற்­றுக்­கொள்­ 
ளக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்பாடாகும்.
எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவுக்கு வழங்கிய வாக்குறுதியை ஒருவருட காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பு நாடுக 
ளையும் அதன் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொள்கிறது என்ற வகையில் சுமந்திரன் எம்.பி. கோரிக்கைவிடுத்துள்ளார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups