
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்த தமிழக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தது. பின் மும்பையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கி தஷ்வந்த் தப்பினார். பின் 24 மணி நேரத்தில் மும்பை போலீஸ் உதவியுடன் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர்.
பின் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 35 சாட்சியங்களின் விசாரணை முடிந்து இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தீர்ப்பு வழங்க உள்ளது. காலை 9 மணி அளவில் தஷ்வந்த் புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட உள்ளார். குற்றவாளி தஷ்வந்த்துக்கு கடுமையான தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.