Home » , » தனித்த பயணம் என்ற நிலைப்­பாட்டில் உறுதி ஸ்ரீலங்கா சுதந்­திர .......

தனித்த பயணம் என்ற நிலைப்­பாட்டில் உறுதி ஸ்ரீலங்கா சுதந்­திர .......

தனித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்கும் கொள்­கையில் நாம் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்றோம். அடுத்து வரும்  48 மணி­நே­ரத்தில் எந்த சவா­லையும் எதிர்­கொள்வோம். எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக  இருக்­கின்றோம் என்று  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர்  தெரி­வித்­துள்­ளனர்.
                
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­தி­ய­ குழுக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்­றது.இதில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் குறித்து முக்­கிய கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது.இந்த சந்­திப்பின் பின்­னரே  சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­திகள்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.
இது குறித்து அமைச்சர் சுசில் பிரே­ம்ஜெ­யந்த கூறு­கையில்;
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய குழு  அமைச்­ச­ரவை கூட்­டத்தின் பின்னர் கூடி­யது.இதன்­போது நாம் கட்­சியின் அடுத்­த­க்கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டினோம்.குறிப்­பாக  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தனித்து பயணம் ஒன்­றினை முன்­னெ­டுக்­கவே தீர்­மா­னித்து வரு­கின்­றது.அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.அதே நிலையில் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சவால்­க­ளுக்கோ ஏனை­யோரின் சவால்­க­ளுக்கோ ஒரு­போதும் அஞ்­ச­வில்லை.எந்த சவால்கள் வந்­தாலும் அதனை நாம் எதிர்­கொள்ள  தயா­ரா­கவே உள்ளோம்.எமது தரப்­பினர் வேறு அணி­களை பல­ப்ப­டுத்துவ­தையோ அல்­லது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் கூட்­ட­ணியில் இணை­யவோ தயா­ராக இல்லை.ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாட்டில் தான் நாமும் உள்ளோம்.அடுத்த 48 மணித்­தி­யா­லங்கள் எந்த சவா­லையும் எம்மால் எதிர்­கொள்ள முடியும்.அதன் பின்னர் எமது நிலைப்­பாடு என்­ன­வென்­பது தெரி­ய­வரும் எனக் குறிப்­பிட்டார்.
இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க கூறு­கையில்,
நாம் முன்­னெ­டுத்­துள்ள தீர்­மா­னங்கள் நாளை மறு­தினம் அனை­வ­ருக்கும் தெரிய வரும்.ஜனா­தி­பதி விசேட அறி­வித்தல் ஒன்­றினை விடுக்­க­வுள்ள  நிலையில் அதில் எமது நிலைப்­பாடு என்­ன­வென்­பது தெரியும். ஜனா­தி­ப­தியும் -பிர­த­மரும் நாட்டு மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வேண்டும். அவற்றில் குறைகள் இருக்கும் என்றால் அவற்றை நிவர்த்தி செய்­யவும் வேண்டும். இப்­போது வரையில் ஒவ்­வொ­ரு­வரும் அவ­ரவர் கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர்.மாறாக கட்­சியின் நிலைப்­பாடு என எதுவும் இல்லை. நாம் என்ன தீர்­மானம் எடுத்தோம் என்­பது தெரி­ய­வரும்.உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களின் மூலம் தனி அர­சாங்கம் ஒன்று அமைப்போம் என கூறு­வ­தற்கு நாம் வெட்­கப்­பட வேண்டும். இந்த தேர்தல் முடி­வுகள் மூல­மாக அர­சாங்கம் அர­சாங்­கத்தின் வேலை­யினை செய்ய வேண்டும்.உள்­ளூ­ராட்சி சபை­களை வெற்றி கொண்ட கட்­சி­யினர் அவர்­களின் கட­மை­யினை செய்ய வேண்டும். நாட்­டினை சரி­யாக முன்­னெ­டுத்து செல்ல வேண்­டிய கடமை எமக்கு உள்­ளது. அதனை புரிந்­து­கொண்டு செயற்­பட வேண்டும்.
அர­சாங்­கத்தில் தவ­றுகள் உள்­ளன. அதனால் தான் இந்த அர­சாங்­கத்தை பயன்­ப­டுத்தி குற்­ற­வா­ளிகள் தப்­பித்து வரு­கின்­றனர்.ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பாடு தான் இன்று குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இந்த தேர்­தலின் மூலம் மக்கள் எமக்கு விடுத்­துள்ள எச்­ச­ரிக்­கை­யினை நாம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். இப்­போ­தா­வது  கள்­ளர்­களை தண்­டிக்க வேண்டும் என்ற செய்­தியை மக்கள் விடுத்­துள்­ளனர். அதைத்தான் மக்கள் எதிர்ப்­பாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர் எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,  ,  நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இணைந்து தொடர்ந்தும் செயற்படுவோம். யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம் சரியான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
          
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups