Home » , » மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது ; ராஜித்த சேனா­ரத்ன

மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது ; ராஜித்த சேனா­ரத்ன

Image result for ராஜித்த சேனா­ரத்னநல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு 2015 ஜன­வரி 8 ஆம் திகதி   ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது கிடைக்­கப்­பெற்ற மக்கள் ஆணை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் மேலும் உறு­தி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் பிர­த­மரை மாற்­றவோ அல்­லது அர­சாங்கம் ராஜி­னா­மா­செய்­யவோ எந்­த­தே­வையும் வெளிப்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித்த சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.
 உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.
அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
நடந்து முடிந்த தேர்­தலில் வெளி­வந்­தி­ருக்கும் பெறு­பே­று­களின் பிர­காரம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­களில் 45வீத­மான வாக்­கு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அது ஜன­வரி 8ஆம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்ட வாக்கு வீதத்­தை­விட குறை­வான வாக்­கு­வீ­த­மாகும். இந்த பெறு­பே­று­களின் பிர­காரம் நாட்டின் பெரும்­பான்­மை­யான வாக்­கா­ளர்கள் தங்கள் வாக்­கு­களை மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட்ட பொது­ஜன பெர­மு­ன­வுக்கு  எதி­ரா­கவே அளித்­துள்­ளமை தெளி­வா­கின்­றது.
மேலும் தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன்  கலந்­து­ரை­யா­டினேன். அர­சாங்­கத்தின் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­து­கொண்டு முன்  செல்ல இரண்­டு­பேரும் இணக்கம் தெரி­வித்­தனர். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் வெற்­றி­பெற்று நாட்டின் பிர­த­ம­ரா­கவோ அல்­லது பொதுத்­தேர்தல் ஒன்றை  நடத்­து­வ­தற்கோ முன்னாள் ஜனா­தி­பதி கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போதும் அது இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. முன்னாள் ஜனா­தி­ப­திக்கு பிர­தமர் பதவி வழங்க ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியோ ஐக்­கிய தேசிய கட்­சியோ இது­வரை முன்­மொ­ழி­ய­வில்லை.
 2015ஆம் ஆண்டு ஊழல் மற்றும் மோச­டி­களை ஒழிப்­ப­தற்கே ஆளும் அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­றது. அதனை தொடர்ந்து முன்­னுக்கு கொண்­டு­செல்ல நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்கள் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளனர்.
 இந்த தேர்­தலில் பேரு­வளை தொகுதி தோல்­வி­ய­டைந்­த­துடன் என்னை கண்டு பிடிக்க முடி­யாமல் இருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்ளார். டலஸ் அழ­கப்­பெ­ரு­ம­வைப்­போன்று நான் அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பிச்­செல்­ல­வில்லை. வீட்டில்தான் இருக்கின்றேன் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 
அத்துடன் மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்து நிலைத்திருப் பேன். அதேபோன்று 2020 க்கு பிறகு ஜனாதிபதியை மீண்டும் நியமிக்கவும் நடவடிக்கை எடுப் பேன்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups