Home » , » மக்­க­ளுக்கு ஜன­நா­யகம் கிடைத்­துள்­ளது - மஹிந்த தேசப்­பி­ரிய

மக்­க­ளுக்கு ஜன­நா­யகம் கிடைத்­துள்­ளது - மஹிந்த தேசப்­பி­ரிய

Related imageநடை­பெற்று முடிந்த தேர்­தலில் மக்­க­ளுக்கு ஜன­நா­யகம் கிடைத்­துள்­ளது. கடந்த காலங்­களை விடவும் அமை­தி­யாக முறைப்­பா­டுகள் குற்­ற ங்கள் குறைந்த ஒரு தேர்தல் இடம்­பெற்­றுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது.  எனினும் தேர்தல் முடி­வு­களில் தாமதம் ஏற்­பட்­ட­மைக்கு நான் தனிப்­பட்ட ரீதியில் பொறுப்­பேற்­கத்­தயார் என தேர்­தல்கள் ஆணைக்­குழு தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.

எம்­முடன் இணைந்து பணி­யாற்ற தமிழ் மொழி­மூல அதி­கா­ரிகள் இல்­லாமை பாரிய    நெருக்­க­டி­யெ­னவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 
அவர் மேலும் கூறு­கையில்,
தேர்தல் முடி­வு­களை  வெளி­யி­டு­வதில் தாமதம் ஏற்­பட்­ட­மைக்கு தனிப்­பட்ட கார­ணிகள் அல்­லது சூழ்­சிகள் என எவையும் இல்லை. எனினும் தேர்தல் முடி­வுகள் அனைத்தும் உரிய வட்­டா­ரங்­க­ளுக்கு 12 மணி­ய­ளவில் தெரி­விக்க முடிந்­தது. மக்­க­ளுக்கு பொது­வாக தெரி­விக்கும் செயற்­பா­டு­களில் சிக்­கல்கள் ஏற்­பட்­டன. அதற்கு தேர்தல் தர­வு­களை வெளி­யிடும்   கணி­னி­களின் தொழி­நுட்ப கோளாறு கார­ண­மா­கவே இவ்­வா­றான தாம­தங்கள் ஏற்­பட்­டன. அதேபோல் எமக்கு இருக்கும் மிகப்­பெ­ரிய சிக்­க­லா­னது எமக்­கான தமிழ் மொழி­பெ­யர்ப்பு உத­வி­யா­ளர்கள் இல்­லா­மை­யே­யாகும். சிங்­கள தமிழ் மொழியில்  நாம் கட­மை­யாற்றும்  நிலையில் சிங்­கள மொழி செயற்­பா­டுகள் குறித்து விரை­வாக செயற்­பட முடிந்த போதும் தமிழ் மொழி­பெ­யர்ப்பு நட­வ­டிக்­கைகள் கையாள எமக்கு  போதிய தகு­தி­யான நபர்கள் இல்லை.
ஆகவே மொழி­பெ­யர்ப்பு செயற்­பா­டுகள் அனைத்­தி­னையும் முன்­னெ­டுக்கும் போது கால தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. இந்த விட­யங்கள் குறித்து நாம் உரிய அதி­கா­ரி­க­ளிடம் பல தட­வைகள் தெரி­வித்­துள்ளோம். ஆனால் எந்­த­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. எனினும் இவற்றை காரணம் காட்டி நான் தப்­பித்­துக்­கொள்ள தயா­ராக இல்லை. ஆகவே எல்­லா­வற்றின் பொறுப்­பையும் நான் தனிப்­பட்ட ரீதியில் ஏற்­றுக்­கொள்­கிறேன்.
 தேர்தல் குறித்து சில முறைப்­பா­டுகள் இன்றும் பதி­வாக்­கப்­பட்­டுள்­ளன. எதிர்­வரும் தினங்­களில் மேலும் சில தேர்தல் முறைப்­பா­டுகள் பதி­வாகும். எனினும் இவற்றில் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத ஆதா­ர­மற்ற முறைப்­பா­டு­களும் உள்­ளன. ஆயு­த­மேந்தி வந்த குழு­வினர் வடக்கில் ஒரு பிர­தே­சத்தில் மக்­களை அச்­சு­றுத்­தி­ய­தாக முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் பாது­காப்பு அதி­கா­ரிகள் பொது­மக்கள் இருந்த ஒரு வாக்­குச்­சா­வ­டியில் அவ்­வா­றான சம்­பவம் இடம்­பெ­று­வது என்­பது ஏற்­று­கொள்ள முடி­யாத ஒன்­றா­கவே உள்­ளது.
அவ்­வாறு இடம்­பெற்­றி­ருந்தால் அங்­கி­ருந்த அனை­வ­ருமே பொறுப்­புக்­கூற வேண்டும்.  எனினும் குறித்த முறைப்­பாடு தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்தி வரு­கின்றோம். ஏனைய சாதா­ரண முறைப்­பா­டுகள் சிலவும் பதி­வா­கி­யுள்­ளன. அவை தொடர்பில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். முறைப்­பா­டு­க­ளுக்கு அமைய தெரி­வு­செய்­யப்­பட்ட நபர்கள் மீது குற்றம் உறு­தி­யாகும் பட்­சத்தில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். அதே­போன்று   மார்ச் மாதம் 6 ஆம் திக­தியே சபைகள் அமைக்­கப்­ப­ட­வுள்ள   நிலையில் பத­வி­வி­லகும் நபர்கள் 6 ஆம் திக­தியின் பின்­னரே அவ்­வாறு இரா­ஜி­னாமா செய்ய முடியும். குறிப்­பாக சுயேச்சைக் குழுக்­களில் தெரி­வு­செய்­யப்­பட்ட நபர்கள் அவ்­வாறே விலக முடியும்.
  நடை­பெற்று முடிந்த தேர்தல் குறித்து மகிழ்ச்­சி­யா­கவும் அதே நிலையில் கவ­லை­யா­கவும் உள்­ளது. அமை­தி­யான முறையில் தேர்தல் இடம்­பெற்­றுள்­ளது, சில குற்­றங்கள் இடம்­பெற்­றுள்ள போதிலும் கடந்த காலங்­களை விடவும் நல்ல வகையில் மக்கள் ஜன­நா­ய­கத்தை உணரும் வகையில் தேர்தல் இடம்­பெற்­றுள்­ளது. சிலர் பொய் பிரச்­சா­ரங்­களை செய்து எம்மை விமர்­சித்த போதிலும் உண்­மைகள் என்­ன­வென்­பது சகல அர­சியல் கட்­சி­க­ளுக்கும் தெரியும். தேர்தல் முடிவுகளை   வெளியிடும் நேரம் சகல கட்சிகளின் பிரதிநிதிகளும் எம்முடன் இருந்தனர்.  நாம் சுயாதீனமாக செயற்படுவது அனைவருக்கும் தெரியும். எனினும் தேர்தலின் பின்னர் சில மோசமான சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்பு சம்பவங்கள் சில இடம்பெற்றமை  வருத்தமளிக்கின்றன.   எவ்வாறு இருப்பினும் மக்களுக்கு ஜனநாயகம் கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups