
கியோட்டோ என்ற பகுதியில் வசித்த வந்த இந்தப் பெண் எடுத்த செல்பி படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவை பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த படங்கள் என்று அறியப்படுகின்றன. இவரது இடுப்பு பகுதி எலும்புகள் கூட தெள்ளத்தெளிவாக தெரியும் அளவிற்கு உடலில் சதையோ, தசை வலிமையோ இன்றி காணப்பட்டுள்ளார்.
டுவிட்டரில் படங்கள் பகிர்ந்த போது இந்த பெண், "சாப்பிட தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் நான்.." என மேற்கோளிட்டு கூறியிருந்தார். தாத்தா இல்லாத சமயத்தில் அல்லது திருட்டுத்தனமாக வீட்டில் இருக்கும் உணவை நான் சாப்பிடுவதை பார்த்து விட்டால், என் தாத்தா எனது வயிற்றில் உதைப்பார், என் வாயில் இருக்கும் உணவை அவரது கையை விட்டு பிடுங்கி வெளியே வீசுவார் என்று தனக்கு நேர்ந்த அவலங்களை பகிர்ந்திருக்கிறார்.
சில சமயம் தன்னை உடல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கி, உண்ட உணவை வாந்தி எடுக்க வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் தான் வெறும் 16.8 கிலோ எடைக்கு தள்ளப்பட்டேன்.
என்னைப் போன்று வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் இன்னும் எத்தனையோ பேர் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பயப்படாமல் வெளியே உதவி நாடுங்கள். நேரம் தாமதப்படுத்தாமல், உங்கள் நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன் உதவி நாடுங்கள் என்று கூறியுள்ளார்.