Home » » மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவகாரம் : பாரா­ளு­மன்றத்தில் விவாதம் இன்று

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவகாரம் : பாரா­ளு­மன்றத்தில் விவாதம் இன்று

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுக்களின் அறிக்­கை கள் மீதான விவாதம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 
விவாதம் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடை­பெ­ற­வுள்­ளது.  விவா­தத்தில்  தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியும் கலந்து கொள்­ளாது. எனினும் ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் கூட்டு எதிர்க்­கட்சி ஆகிய கட்­சிகள் கலந்து கொள்ளும் என அறி­வித்­துள்­ளன.
இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி வழங்­கலில் மோசடி நடந்­துள்­ளமை தொடர்­பாக ஆராய்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது. அதே­போன்று முன்­னைய ஆட்­சியின் போது இடம்­பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கும் ஜனா­தி­ப­தி­யினால் ஆணைக்­குழு நிறு­வப்­பட்­டது. இவ்­விரு ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைகள் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. 
இந்­நி­லை­யி­லேயே   இவ்­விரு அறிக்­கை­களை பாரா­ளு­மன்றம் சமர்ப்­பித்து விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. எனினும் இரு அறிக்­கைகள் மீதான விவா­தத்தை நடத்­து­வ­தற்­கான திக­தியை தீர்­மா­னிப்­பதில் பல்­வேறு சிக்­கல்கள் ஏற்­பட்­டன. அத்­துடன் குறித்த அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கல­வ­ர­மான நிலை­மையும் ஏற்­பட்­டது.
இதன்­படி ஜன­வரி முதல் வாரத்தில் கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது பெப்­ர­வரி 20,21 ஆம் திக­தி­களில் இவ்­விரு அறிக்­கைகள்   மீது விவாதம் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டது. எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விவா­தத்தை தேர்­த­லுக்கு   முன்னர் நடத்தி காட்­டு­மாறு சவால் விடுத்­த­மைக்கு அமை­வாக பெப்­ர­வரி 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்டி விவா­தத்தை   நடத்த ஏற்­பாடு செய்­யு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ருக்கு ஆலோ­சனை விடுத்­தி­ருந்தார். 
இது தொடர்­பாக ஆராய மீண்டும் கட்சி தலை­வர்கள்  கூடி ஆராய்ந்­தனர். இதன்­போது கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­டாத நிலைமை ஏற்­பட்­டது. அத்­துடன் 8 ஆம் திகதி விவாதம் நடத்­து­வதில் சட்ட சிக்­கலும் இருப்­ப­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு அறி­வித்­தது. இதற்கு அமை­வாக பெப்­ர­வரி 6 ஆம் திகதி விவா­தத்தை நடத்­து­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விற்கு ஆலோ­சனை  வழங்­கினார்.  
இத­னை­ய­டுத்து  இரு அறிக்­கை­களின் மீது இன்­றைய தினம் விவாதம் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­படி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் விவாதம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்த விவா­தத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கலந்து கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இரு அறிக்­கைகள் மீதான விவாதம் ஒரு நாளுடன் மட்­டு்ப்­ப­டுத்­தப்­ப­டாது என்றும் தேர்­தலின் பின்னர் விவாதம் தொடர்ந்து இடம்­பெறும்  என்றும் இன்­றைய  விவா­தத்­திற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும்  சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். 
என்றாலும் தேர்தல் பிரசார கூட்டங்கள்   காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்கு கூட்டடணியும் கலந்து கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups