Home » » "போர்க்­குற்­றங்­களை நிரா­க­ரிக்கும் எமது நிலைப்­பாட்டை இம்­மு­றையும் தெரி­விப்போம்"

"போர்க்­குற்­றங்­களை நிரா­க­ரிக்கும் எமது நிலைப்­பாட்டை இம்­மு­றையும் தெரி­விப்போம்"

போர்க்­குற்­றங்­களை  நிரா­க­ரிக்கும் எமது நிலைப்­பாட்டை இம்­மு­றையும்  ஜெனி­வாவில் தெரி­விப்போம் என எலிய அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஜெனிவா செல்­ல­வுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். 
எதிர்­வரும் 16 ஆம் திகதி அவர் ஜெனிவா செல்­ல­வுள்­ள­தா­கவும் அறி­வித்தார்.  
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்­றது.    இந்­நி­லையில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர எலிய அமைப்பின் பிர­தி­நி­தி­யாக ஜெனிவா செல்­ல­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.    இது குறித்து வின­வியபோதே அவர் மேற்கண்­ட­வாறு  குறிப்­பிட்டார். 
இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 
இம்­மு­றையும் எலிய சார்பில் நான் ஜெனிவா பய­ண­மா­கின்றேன். எதிர்­வரும் 16 ஆம் திகதி பய­ண­மாக நினைத்­துள்ளேன். இம்­மு­றையும் நாங்கள் எமது நிலைப்­பாட்­டினை உறு­தி­யாக தெரி­விக்க வேண்டும். ஏனெனில் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வு­ட­னேயே இலங்­கையின் சர்­வ­தேச தரப்­பிடம்  அடி­ப­ணிய வைத்­து­விட்­டது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்­கையில் புதிய அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரப்­படும், பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படும், காணா­மல்­போனோர் காரி­யா­லயம் அமைக்­கப்­படும் என்ற  வாக்­கு­று­தி­களை கொடுத்தும் யுத்த குற்­றங்கள் குறித்து விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கியும் எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுத்­து­விட்­டது. 
ஆகவே இலங்கை அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத வரையில் சர்­வ­தேசம் தொடர்ச்­சி­யாக இலங்­கைக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூல­மாக தமது தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ளும் நடவ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. 
எவ்­வாறிருப்­பினும் நாம் தொடர்ச்­சி­யாக எமது இரா­ணு­வத்தை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இம்­மு­றையும் நாம் இலங்கை  இரா­ணு­வத்தை காப்­பாற்றும் வகையில் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்போம். ஜெனி­வாவில் எமது கரங்­களை பலப்­ப­டுத்தும் தரப்பை சந்­தித்து அவர்­களின் ஆத­ர­வி­னை பெற்­றுக்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுப்போம். சர்­வ­தேச சிங்­கள அமைப்­புகள், சிங்­கள மக்­களை சந்­தித்தும் எமக்கு ஆத­ர­வான நகர்­வு­களை முன்­னெ­டுக்க அழுத்தம் கொடுப்போம். 
எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுக்க இட­ம­ளிக்கமாட்டோம். அதற்­கான குர­லா­கவே நாம் ஜெனி­வாவில் கருத்­துக்­களை வெளி­ப்ப­டுத்தி வரு­கின்றோம். 
 இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த தேசத்­து­ரோக செயற்­பாட்டை நாம் சாதா­ர­ண­மாக விடப்­போ­வ­தில்லை. எமது ஆட்­சியில் இவர்கள் அனை­வ­ரையும் கண்­டிப்­பாக தண்­டிப்போம். இன்று இரா­ணு­வத்தை குறை­கூறும் நபர்கள், சர்­வ­தேச நாடு­களில் இருந்­து­கொண்டு புலி­களை ஆத­ரிக்கும் நபர்கள் இலங்­கையை பழி­தீர்க்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனினும் பிரித்­தா­னி­யாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கையில் இலங்கையின் தேசியக் கொடியை  தரையில் வீசி கால்களால் மிதித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இவை அனைத்துமே இலங்கையில் ஒற்றுமையாக வாழும் தமிழ்–சிங்கள மக்கள் மத்தியிலேயே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups