Home » » அரசியலில் இறங்கினார் கமல் !கட்சி பெயர், கட்சி கொடி, கொள்கையை அறிவித்தார் ; விபரங்கள் இதோ

அரசியலில் இறங்கினார் கமல் !கட்சி பெயர், கட்சி கொடி, கொள்கையை அறிவித்தார் ; விபரங்கள் இதோ

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை கமல்ஹாசன் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசும் போதே கமல்ஹாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்யைில்,
 'எங்கள் தண்டவாளமும் உங்கள் வண்டவாளமும் வெளிவரும் நாள் இன்று. 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்த கூட்டத்தை நீங்கள் பார்த்தீர்கள். இன்று பேசும் நாள், நாளை செயல்படும் நாள்.
இங்கு பணத்திற்கு பஞ்சமில்லை, நல்ல மனதிற்குதான் பஞ்சம். எங்கள் நற்பணிகளுக்கு இடைஞ்சலாக சில அரசுகள் இருந்தன. அதனை மறக்க மாட்டோம். நல்ல கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்றால் ஆண்டுக்கு ரூ.6000 இல்லை ரூ.6 இலட்சம் கிடைத்திருக்கும். நாங்கள் சமூக சேவகர்களாக வந்துள்ளோம். செய்ய வேண்டியதை செய்தாலே போதுமானது.
 கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு மது வியாபாரத்தை அரசு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சாராயத்தை யார் வேண்டுமானாலும் விற்கலாம். கல்வியை அப்படி விடமுடியுமா? எல்லா தரப்பினருக்கும் தரமான கல்வி போய்ச் சேர வேண்டும்.
படித்த இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளார்கள். அதை மாற்ற முடியும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 
சாதி, மதம் அறவே நீக்கப்பட வேண்டும். ஊழலை குறைத்தால் மின்சாரம் வரும். நான் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. நீங்களும் வாருங்கள் சேர்ந்து ஊழலை ஒழிப்போம்.
எனக்கு வயது 63. நான் 40 வருட ஆட்சிக்காக வரவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் யாரும் நிரந்தர முதல்வராக இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குவாட்டரும், ஸ்கூட்டரும் நீடிக்காது. இலவசம் இருக்காது. ஆனால், மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கித் தரும் பொருளாதாரத்தை ஏற்படுத்துவேன் எனத் தெரிவித்தார்.
நான் சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு
 நான் சினிமா நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு என ராமநாதபுரத்தில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இராமேசுவரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன் பின்னர் ராமநாதபுரம் சென்றார்.
அங்கு "இனி நான் சினிமா நட்சத்திரம் இல்லை. உங்கள் வீட்டு விளக்கு. இந்த விளக்கை ஏற்றிவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கூட்டம் அதிகமாக இருப்பதைப் பார்த்து சற்று தயங்கினேன். யாருக்கும் எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற அச்சம் நிலவியது. ஆனால், மேடையில் ஏறிய பின்னர் இப்படி ஒரு வாய்ப்பை நழுவவிடக் கூடாது என உணர்கிறேன். மக்கள் வெள்ளத்தில் நீந்திவந்த நான் இன்னும் பல இடங்களில் போராடி நீந்த வேண்டி இருக்கிறது எனத் தெரிவித்தார்.
மக்களுக்கு புரியும் விதத்தில் எனது கொள்கைகளைத் தெரிவிப்பேன்
 மக்களுக்கு புரியும் வகையில் எனது கொள்கைகளை எடுத்துரைப்பேன் என தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இராமேசுவரம் கணேஷ் மகாலில் மீனவ சங்கப் பிரதிநிதிகளை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். 
அப்போது அவர், "மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது தனது கடமை. தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. மீனவத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களும் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிகை வாயிலாக அறிவதற்கு பதிலாக நான் நேரில் சந்தித்து அறிய வந்திருக்கிறேன். மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்றவில்லை . நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும். நாம் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலாம், அதற்கான நாளும் ,நேரத்தையும் தேர்வு செய்வோம் எனத் தெரிவித்தார்.
கட்சிக்கொடி உணர்த்துவது என்ன ?

மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கமல் தன் கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார். 
''கட்சியின் கொடியில் உற்றுப்பார்த்தால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். 
ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும். நடுவில் இருக்கும் நட்சத்திரம் மக்களாகிய நீங்கள்தான். மக்களையும் நீதியையும் மய்யமாகக் கொண்டு இணைக்கும் கட்சி என்பதால் மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.
தராசின் நடுமுள் நாம். எந்தப் பக்கமும் சாயமாட்டோம். நீங்கள் வலதா, இடதா என்று கேட்கிறீர்கள். அதனால்தான் கட்சியின் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்'' என்றார் கமல்.
'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிப்பு
மல் தொடங்கியுள்ள 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று தனது கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். 
பிறகு மக்கள் நீதி மய்யம் தான் தன் கட்சியின் பெயர் என்று கமல் அறிவித்தார். இந்நிலையில், கட்சிக்காக மய்யம். கொம் என்ற அதிகாரபூர்வ இணையதளமும் ஆரம்பிக்கப்பட்டது.
மகேந்திரன்,அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீப்ரியா, ராஜ்குமார்,கமிலா நாசர், சவுரிராஜன், ராஜசேகரன், சி.கே.குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோர் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த பொறுப்பாளர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்காக புது இணையதளம் 
கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற தன் கட்சிக்காக மய்யம்.கொம் என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை ஆரம்பித்தார்.
மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று தனது கட்சியின் கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். 
பிறகு 'மக்கள் நீதி மய்யம்' தான் தன் கட்சியின் பெயர் என்று கமல் அறிவித்தார். இந்நிலையில், கட்சிக்காக மய்யம்.கொம் என்ற அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் திகதிதி அன்று 'மய்யம் விசில்' செயலியை அறிமுகப்படுத்தினார். 
பிரச்சினைகளைப் பற்றி மக்களோடு பேசித் தீர்க்க 'மையம் விசில்' செயலியை அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
தற்போது மய்யம்.கொம் என்ற இணையதளத்தை கமல் தொடங்கியுள்ளார். அதில், 70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காகச் செயலாற்ற வேண்டிய தருணம் இது . மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே என்ற வாசகங்களுடன் இணையத்தில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups