Home » » கல்வி அமைச்சில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­டா­மைக்கு காரணம் கூறுகிறார் கல்வி இரா­ஜாங்க அமைச்சர்

கல்வி அமைச்சில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­டா­மைக்கு காரணம் கூறுகிறார் கல்வி இரா­ஜாங்க அமைச்சர்

Image result for வே.இரா­தா­கி­ருஷ்ணன்அமைச்­ச­ரவை மாற்­றத்தின்போது  அமைச்­சுக்கள் பல மாற்­ற­ப்பட்டபோதும் கல்வி அமைச்சு மாற்­ற­ப்ப­டா­த­தற்கு காரணம்  அதன் திருப்­தி­க­ர­மான  செயற்­பா­டு­களே ஆகும்  என  கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வே.இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.
கற்­பித்­தலில் தேசிய டிப்­ளோ­மா­தா­ரிகள் 71 பேருக்கு இரண்டாம் கட்­ட­மாக நிய­மனம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை கல்வி அமைச்சில் அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் மற்றும் கல்வி இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் ஆகியோரின் தலை­மையில் நடை­பெற்­றது. இதன்போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், 
ஒரு நாட்டில் கல்­வித்­துறை அபி­வி­ருத்­தி­யா­னது அந்நாட்டின் ஏனைய அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். அதனை கருத்திற்கொண்டு ஒரு குறிப்­பிட்ட  காலத்தில் கல்வி அமைச்சு கல்­வித்­து­றையில் பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்துள்­ளது. 
அந்த வகையில் ஆசி­ரியர் நிய­ம­னங்கள்,  அதி­கா­ரி­களின் நிய­ம­னங்கள், பாட­சா­லை­களின் உட்­கட்­ட­மைப்பு வச­திகள்,  அபி­வி­ருத்தி  செயற்­றிட்­டங்கள்,  மாண­வர்­க­ளுக்­கான காப்­பீடு,  பாட­சா­லை­களில் மின்­சாரம், மல­சலகூடம், குடிநீர் திட்ட அபி­வி­ருத்­திகள்,  அருகில் உள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை செயற்­றிட்டம், அத்­துடன் மலை­ய­கத்தில் 25 கணித, விஞ்­ஞான பாட­சா­லை­களின் அபி­வி­ருத்தி,  ஆசி­ரியர் பயிற்­சி­ச்சாலை உட்­பட தேசிய கல்­வியியற் கல்­லூ­ரி­களின் அபி­வி­ருத்­திகள் என கல்­விசார் பல்­வேறு விட­யங்­களில் அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  
இந்த செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே அமைச்­ச­ரவை மாற்­றத்தின்  போது  அமைச்­சுக்கள் பல மாற்­ற­ப்பட்ட போதும், கல்வி அமைச்சு மாற்றப்படவில்லை. இதன் திருப்திகரமான செயற்பாடுகள் குறித்து  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பிரதமர் உட்பட ஜனாதிபதியும்  நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்றார்
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups