
நடந்து முடிந்த தேர்தலில், ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மே மாதத்துக்குப் பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து செப்டம்பர் மாதம் இத்தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.