Home » » ”இதுவரை 186 பேஸ்புக் கணக்குகள்” : கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்.!

”இதுவரை 186 பேஸ்புக் கணக்குகள்” : கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்.!

மக்கள்  மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும்  ஏற்­ப­டுத்தும்  வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் கணக்குகள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கண்­டியில் இடம்­பெற்ற வன்­முறை சம்­ப­வங்­கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் வதந்திகளை பரப்பியதாக தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சம்பங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சைபர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்ள பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்­ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் வழமைக்கு திரும்பும் என தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups