Home » » டுவிட்டர் செய்தி மூலம் ட்ரம்பால் பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர்

டுவிட்டர் செய்தி மூலம் ட்ரம்பால் பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர்

Image result for டொனால்ட் ட்ரம்ப்அமெ­ரிக்க  ஜனா­தி­பதி  டொனால்ட் ட்ரம்ப்,  அந்­நாட்டு இரா­ஜாங்கச் செய­லாளர் ரெக்ஸ் தில்­லர்­ஸனை   நேற்று  முன்­தினம்  செவ்­வாய்க்­கி­ழமை  டுவிட்டர் இணை­யத்­தளம் மூலம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பணி நீக்கம் செய்­துள்ளார்.
 ரெக்ஸ் தில்­லர்­ஸனின்  பதவி நிலைக்கு  சி.ஐ.ஏ. புல­னாய்வுப் பிரிவின்  பணிப்­பாளர் மைக் பொம்­பி­யோவை அவர் பெயர் குறிப்­பிட்­டுள்ளார்.
இது தொடர்பில்  டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்­தினம்   செவ்­வாய்க்­கி­ழமை வெள்ளை மாளி­கைக்கு வெளி­யே­யி­ருந்து உரை­யாற்­று­கையில்,  ரெக்ஸ் தில்­லர்­ஸ­னுக்கும் தனக்­கு­மி­டை­யி­லான கருத்து வேறு­பா­டுகள் கார­ண­மா­கவே அவரை பணி நீக்கம் செய்ய நேர்ந்­த­தாகத் தெரி­வித்தார்.
தாம் இரு­வரும்  நல்­ல­மு­றையில்  இணைந்து செயற்­பட்டபோதும் வெளி­நாட்டு விவ­கா­ரங்கள்  தொடர்பில் தம்­மி­டையே பெரும் முரண்­பா­டுகள் காணப்­பட்­ட­தாக  அவர் குறிப்­பிட்டார்.
"ஈரா­னிய  உடன்­ப­டிக்­கையை நோக்கும் போது அது மிகவும் மோச­மா­னது என நான் கரு­து­கிறேன். ஆனால்  அவரோ அது சரி­யா­னது என நினைக்­கிறார்" எனத் தெரி­வித்த டொனால்ட் ட்ரம்ப்,  ஆனால் மைக்  பொம்­பி­யோ­விற்கும்  தனக்­கு­மி­டையே சிந்­த­னையில் ஒரு­மைப்­பாடு நில­வு­வ­தாகக் கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்­சிக்கு வந்த பின்னர் அவரால் நிய­மிக்­கப்­பட்டு வெளி­யேற்­றப்­பட்ட  சிரேஷ்ட அதி­கா­ரி­களின் நீண்ட பட்­டி­யலில்  புதி­தாக இணைந்து கொண்­ட­வ­ராக  ரெக்ஸ் தில்­லர்ஸன் விளங்­கு­கிறார்.
 ரெக்ஸ் தில்­லர்ஸன்  பொது விவ­கா­ரங்­களின் ஒரு தொகை   இணக்­கப்­பா­டின்­மையை தொடர்ச்­சி­யாக வெளிப்­ப­டுத்தி வந்­த­தா­கவும்  அது முடி­வற்ற விதத்தில் தொடர்ந்­த­தை­ய­டுத்தே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் வெள்ளை மாளி­கையால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
 ரெக்ஸ் தில்­லர்­ஸ­னுக்கு பதவி விலக அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­வ­தாக வெள்ளை மாளிகை உத்­தி­யோ­கத்­தர்கள்  தலைவர்  ஜோன் ­கெல்லி தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­தி­ருந்­த­தாக வெள்ளை மாளிகை  கூறு­கி­றது.
 இதன்­போது தான்  ஆபி­ரிக்க சுற்றுப் பய­ணத்தை முடித்து  நாடு திரும்பும் வரை தான் பத­வி­யி­லி­ருந்து விலக்­கப்­ப­டு­வது தொடர்­பான அறி­விப்பை மேற்­கொள்ள வேண்டாம்  என ரெக்ஸ் தில்­லர்ஸன் கேட்­டுக்­கொண்­ட­தாக  அந்த மாளிகை தெரி­விக்­கி­றது.
ஆனால்  கீழ் நிலைச் செய­லாளர் ஸ்டீவ்  கோல்ட்ஸ்­ரெ­யினால்  வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில்,  ஜனா­தி­ப­தியின் டுவிட்டர் செய்­தியின் மூலமே ரெக்ஸ் தில்­லர்ஸன் தனது பதவி விலகல் குறித்து  அறிந்­த­தாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அறி­யப்­ப­டாத கார­ணங்­க­ளுக்­காக  ரெக்ஸ் தில்­லர்ஸன்  ஜனா­தி­ப­தி­யுடன்  பேச­வில்லை என தெரி­வித்த ஸ்டீவ்  கோல்ட்ஸ்­ரெயன்,   தானும்  பதவி வில­கி­யுள்­ள­தாக  கூறினார்.
 தன்னைப் பதவி விலக்­கு­வது குறித்து டுவிட்டர் செய்­தியை வெளியிட்டு சுமார் 3  மணி நேரத்தில் டொனால்ட் ட்ரம்­பி­ட­மி­ருந்து தொலை­பேசி அழைப்­பொன்றைப் பெற்­ற­தாக  தில்­லர்ஸன் கூறினார்.
 அவர் அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில் உரை­யாற்­று­கையில்,  தான்  சீனா­வுடன்  நல்ல உற­வு­களைப் பேணவும்  வடகொரி­யாவின் அணு ஆயுத  நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு கடி­வா­ள­மி­டவும் சிறப்­பாக பணி­யாற்­றி­யுள்­ள­தாகத் தெரி­வித்தார்.
எக்­ஸொன்­மோபைல் நிறு­வ­னத்தின் முன்னாள் தலை­வ­ரான ரெக்ஸ் தில்­லர்ஸன்  கடந்த வருடம்  இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக  நிய­மிக்­கப்­பட்­டது முதற்­கொண்டு ஒரு தொகை விவ­கா­ரங்­களில் வெள்ளை மாளி­கை­யுடன் முரண்பாட்டைக் கொண்டிருந்தார்.
அதேசமயம்  ரஷ்ய அரசாங்கத்தின்  பிரச்சினைக்குரிய நடத்தை மற்றும் செயற்பாடுகளுக்கு எதிராக  மேற்கொள்ள வேண்டிய   பெருமளவு பணி தொடர்ந்தும் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். தான் தனது பணிநீக்கம் குறித்து  தெளிவுபடுத்த எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியைக் கோரவுள்ளதாக அவர்  தெரிவித்தார்
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups