Home » » அவுஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு.!

அவுஸ்திரேலிய அரசின் அதிரடி உத்தரவு.!

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் பந்தின் தன்­மையை மாற்ற துணை போன, ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்­தி­ரே­லிய தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். 
இந்த விவகாரத்தை அடுத்து ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவுஸ்திரேலிய அரசின் அமைப்பான அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தை முன்னே அறிந்து வைத்திருந்த யாராக இருந்தாலும், தலைமைக்குழு உறுப்பினர்கள் அல்லது பயிற்சி ஊழியர்களாக இருந்தாலும், ஸ்மித்துடன் சேர்ந்து அவர்களும் பதவி விலக வேண்டும் என்று விளையாட்டு ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அணித் தலைவர் ஸ்மித் மற்றும் துணைத் தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.
தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள அவுஸ்­தி­ரே­லிய அணி நான்கு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்­கேற்­கி­றது. 
முத­லி­ரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சம­நி­லையிலுள்­ளது. மூன்­றா­வது டெஸ்ட் கேப் ­ட­வுனில் நடை­பெற்­று­வ­ரு­கி­றது.
இதன் மூன்­றா­வது நாள் ஆட்­டத்தில், தென்­னா­பி­ரிக்க அணி 2ஆவது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தாடிக் கொண்­டி­ருந்­தது. 
உணவு இடை­வே­ளைக்­குப்பின், அவுஸ்­தி­ரே­லிய வீரர் பான்­கிராப்ட் மஞ்சள் நிறத்­தி­லான ஒரு பொருளை பந்தின் மீது தேய்த்தார். 
இது தொலைக்­காட்சி காணொ­ளியில் பதி­வா­னதை உணர்ந்த பான்­கிராப்ட் அப் பொருளை காற்­சட்­டையின் முன் பகு­தியில் மறைத்­துக்­கொண்டார். நடு­வர்கள் கேட்­ட­போதும், கறுப்பு நிற பொருளை மட்டும் காட்­டினார். இருப்­பினும், பான்­கிராப்ட் பந்தை சேதப்­ப­டுத்­தி­யமை உறு­தி­யா­னது. இச் சம்­ப­வத்தில், அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் உடனிருந்தார். 
போட்­டிக்­குப்பின், பத்­தி­ரி­கை­யா­ளர்­களை சந்­தித்த பான்­கிராப்ட் கூறு­கையில், ‘‘உணவு இடை­வே­ளை­யின்­போது, பந்தின் தன்­மையை எப்­படி மாற்­று­வது என்­பது குறித்து திட்­ட­மிட்டோம். இதனால், வாய்ப்பு கிடைத்த நேரத்தில் மஞ்சள் நிற ‘டேப்பை’ கொண்டு பந்தின் மீது தேய்த்தேன். ஆனால், நூற்­றுக்­க­ணக்­கான ‘கம­ராக்கள்’ இருப்­பதை மறந்­து­விட்டேன். இது தெரிந்­த­வுடன் பதற்றமாகி விட்­டது. எனது செயலை எண்ணி வருந்­து­கிறேன்,’’ என்றார்.
அணித் தலைவர் ஸ்மித் கூறு­கையில்,‘‘ எங்கள் அணி வீரர்கள் ஏற்­க­னவே பந்தின் தன்­மையை மாற்ற முடிவு செய்­தி­ருந்­தனர். இது விளை­யாட்டு உணர்­வுக்கு எதி­ரா­னது. 
இச் செய­லுக்கு வருத்தம் தெரி­வித்­துக்­கொள்­கிறேன். இனி இப்­ப­டி­ப்பட்ட சம்­பவம் நடக்­காது என உறுதியளிக்­கிறேன். அதே நேரம், தலைவர் பத­வி­யி­லி­ருந்து விலக மாட்டேன். அணியை வழி­ந­டத்தும் சரி­யான நபர் நான்தான் என நம்­பு­கிறேன்,’’ என்றார். 
இந்­நி­லையில் இப் பிரச்­சினை பெரியளவில் வெடித்­தது. பான்­கிராப்ட் பந்தை சேதப்­ப­டுத்­தி­யதை அணித் தலைவர் ஸ்மித் ஏற்றுக் கொண்டார். 
இதனால் அவ­ருக்கு நெருக்­கடி ஏற்­பட்­டது. அவுஸ்­தி­ரே­லிய அரசு ஸ்மித்தை தலைவர் பத­வி­யிலி­ருந்து நீக்க பரிந்­துரை செய்­தது.
இந்­நி­லையில் அணித் தலைவர் ஸ்மித், துணைத் தலைவர் வோர்னர் ஆகியோர் பத­வி­யி­லி­ருந்து விலக ஒப்புக் கொண்­டனர். 
இதனால் கிரிக்கெட் சபை அவர்­களை உடனடியாக நீக்கியது. ஸ்மித்துக்குப் பதிலாக விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
ஸ்மித்தின் இச் செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல், முன்னாள் வீரர் கிளார்க் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஐ.சி.சி.யின் தண்டனை
இந்த விவ­காரம் குறித்து விசா­ரணை நடத்­திய ஐ.சி.சி., ஸ்மித்­துக்கு போட்டி ஊதியம் முழு­வ­தையும் அப­ராதம் விதித்­துடன், ஒரு போட்­டியில் விளை­யாடத்த தடையும் விதித்­துள்­ளது. அதேபோல், பந்தைச் சேதப்­ப­டுத்­திய கேமரூன் பான்­கி­ராப்­டுக்கு போட்டி ஊதி­யத்­தி­லி­ருந்து 75 சத­வி­கிதம் அப­ரா­தமும், 3 டிமெரிட் புள்­ளி­க­ளையும் ஐ.சி.சி. வழங்­கி­யுள்­ளது. 
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups