சுய­மாக சுதந்­தி­ரத்தை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள சோமா­லி­லாந்து பிராந்­தி­யத்தை மீளவும் சோமா­லி­யா­வுடன் இணைப்­ப­தற்கு பரிந்­துரை செய்யும் கவி­தை­யொன்றை எழு­தி­ய­மைக்­காக இளம் பெண்  கவிஞர் ஒரு­வ­ருக்கு 3 வருட சிறைத்­தண்­டனை விதித்து சோமா­லி­லாந்து நீதி­மன்­ற­மொன்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது.  
நசிமா குவோரேன் என்ற பெண் கவி­ஞ­ருக்கே இவ்­வாறு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  இந்த நீதி­மன்றத் தீர்ப்பின் மூலம் நசி­மாவின் அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக மனித உரிமைக் குழுக்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன.
 சோமா­லி­லாந்­தா­னது 1991 ஆம் ஆண்டு சோமா­லி­யா­வி­லி­ருந்து  சுதந்­தி­ரத்தை சுய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.