Home » » நச்சு வாயுத்தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு!!

நச்சு வாயுத்தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு!!

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் என்று மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Image result for சிரியாவில் நச்சு வாயுத்தாக்குதல்- 70 பேர் உயிரிழப்பு!!
இது குறித்துதன்னார்வ மீட்பு படையினரான “தி வைட் ஹெல்மட்ஸ்” குழு,கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள ஒளிப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இரசாயனத் தாக்குதல் நடத்தியதாகத் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசு, அவை ‘சோடிக்கப்பட்டவை’ என்று தெரிவித்துள்ளது.
அறிக்கைகளை கண்காணித்து வரும் அமெரிக்கா, தாக்குதல்களில் இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து போராடும் ரஷ்யா தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
“இறுதியில், ரசாயன ஆயுதங்கள் வைத்து எண்ணற்ற சிரிய மக்களை தாக்கியதற்கு ரஷ்யாவே பொறுப்பு” என்றும் கூறப்பட்டுள்ளது.
வாயு தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டதாகக் கூறப்படும் உருளை குண்டில் ‘சரின்’ எனப்படும் நச்சு இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு கூட்டா பகுதியில்,கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா, சிரிய அரசு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups