Home » » பிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா?...

பிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா?...

எம்.எம்.மின்ஹாஜ்
பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் 24 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது அப்போது பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால பக்கசார்பான முறையில் நடந்துக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குற்றம் சுமத்தி வந்தனர்.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில் தற்போது பிரதிசபாநாயகர் எவரும் நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி பாராளுமன்றத்தின் 225 பேரின் விருப்பின் பிரகாரம் பிரதி சபாநாயகர் நியமிக்கப்படுவார்.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவான முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் உட்பட ஒரு சில அமைச்சர்கள் 24 பேர்  கையொப்பமிட்டு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் வினவிய போது,
பிரதி சபாநாயகர் பதவி தன்னை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரதமர் கடிதம் கையளித்துள்ளனர். எனினும் பிரதமர்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
Share this article :

இலங்கைச் செய்திகள்

கல்வி

திரைச் செய்திகள்

மகளீர் பக்கம்

ஆண்மீகம்

 
Support : Copyright © 2017. தழிழ்ச்செய்திகள் - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups