வட­மா­காண முத­ல ­மைச்சர் சி.வி.விக்­னே ஸ்­வரன் இன்று இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். ஆன்­மீக சுற்­றுப்­ப­யணம் ஒன்­றினை மேற்­கொண்டு இன்று தமி­ழகம் செல்லும் அவர் இரு­வார காலம் அங்கு தங்­கி­யி­ருப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 
தமி­ழகம் செல்லும் முத­ல­மைச்சர் சில சந்­திப்­புக்­க­ளிலும் கலந்­து­கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக முத­ல­மைச்சர் தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­துள்­ளன.
எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வட­மா­காண சபையின் பதவிக் காலம் முடி­வ­டை­ய­வுள்­ளது. இந்த நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் எத்­த­கைய முடி­வினை எடுப்பார் என்ற பர­ப­ரப்­பான  நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை அடுத்த மாகாண சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் சார்பில் கள­மி­றங்கும் உத்­தேசம் இல்லை என்று கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்­திரன் கருத்துத் தெரி­வித்­துள்ள நிலையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தனது அடுத்த கட்ட நிலைப்­பாடு குறித்து விரைவில் அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 
ஆன்­மீக சுற்­று­லாவை மேற்­கொண்டு இந்­தியா செல்லும் முத­ல­மைச்சர் நாடு திரும்பியவுடன் தனது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது.