முல்­லைத்­தீவில் மகா­வலி குடி­யேற்றப் பிர­தே­சங்­களில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் நடை­பெ­று­வதை எதிர்த்து வட மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் ஒன்று திரண்டு முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­துக்கு முன்னால் நாளை மறுதினம் 10ஆம் திகதி மாலை 3மணிக்கு கவ­ன­யீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்­த­வுள்­ள­தாக  வட­மா­காண சபை உறுப்­பினர் ரீ.ரவி­கரன் நேற்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு தெரி­வித்தார்.   போராட்­டத்தின் பின்னர் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு அனுப்­பி­வைக்கும் வகையில் மக­ஜர்கள் முல்­லைத்­தீவு மாவட்ட செய­லா­ள­ரிடம் கைய­ளிக்­கப்­படும் என்றும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், முல்­லைத்­தீவில்  திட்­ட­மிட்ட  சிங்­களக்  குடி­யேற்றம்  நடை­பெறும்  இடங்­களை வட­மா­காண  சபை  உறுப்­பி­னர்­க­ளா­கிய நாம் நாளை மறு­தினம்  நேரில்  சென்று  பார்­வை­யி­ட­வுள்ளோம்.
மேலும், இங்கு குடி­யி­ருந்த தமிழ்  மக்கள்  1984 ஆம் ஆண்டு  காடு­க­ளுக்குள் புலிகள்  ஊடு­ரு­வி­யுள்­ள­தாகத் தெரி­வித்தே வெளி­யேற்­றப்­பட்­டனர்.  பின்னர்  இக்­கா­ணிகள்  மகா­வலி  காணிகள் என அரசால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டன.  அதன் பின்னர்  இப்­போது இக்­கா­ணி­களில்  சிங்­களக்  குடி­யேற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன  என்றார்.
இதே­வேளை, மகா­வலி அபி­வி­ருத்தித் திட்­டத்தின் கீழ் முன்­னெ­டுக்­கப்­படும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றத்­திட்­டங்கள்  உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­ட­வேண்டும். இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருடன் விரைவில் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம் என்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில், மகா­வலி அபி­வி­ருத்தித்  திட்­டத்தின் கீழ் தண்ணீர் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். ஆனால் இதனை சாட்­டாகக் கொண்டு வெளி­மா­வட்­டத்தைச் சேர்ந்­த­வர்­களை குடி­யேற்றம் செய்­வது, நிலத்தை அப­க­ரிப்­பது என்­பது ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது குடி­யேற்றம் செய்­யப்­ப­டு­வ­தாயின் அந்த மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­களே குடி­யேற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும் அவ்­வாறு செய்­வ­தா­யினும் அந்­தந்த மாவட்­டத்தை, மாகா­ணத்தை சேர்ந்த மக்கள் பிர­தி­நி­தி­க­ளுடன்  கலந்­து­ரை­யா­டியே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கூறினார். 
மேலும், மகா­வலி அதி­கா­ர­சபை சட்­டத்தை இரத்­துச்­செய்­யுங்கள் என நாம் கேட்­ப­தற்­கான சட்ட ஏற்­பா­டு­களை செய்­வ­தற்கு முன்பு முல்­லைத்­தீவு மாவட்டம் முழு­மை­யாக பறி­போகும் அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் எச்­ச­ரித்­துள்ளார். இது குறித்து அவர் தெரி­விக்­கையில் மகா­வலி அதி­கா­ரச்­ச­பை­யினால் செய்­யப்­பட்ட காணிக் கைமாற்­றங்கள் மற்றும் குடி­யேற்­றங்கள் சட்ட ரீதி­யாக எவ்­வ­ளவு வலு­வா­னது என்­பது குறித்து நீதி­மன்­றங்­க­ளினால் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. ஏனெனில் 13 ஆம் திருத்தச்சட்டம் அரசியலமைப்பின் ஒரு அங்கமாகும். அரசியலமைப்பே சட்டரீதியாக மற்றைய எல்லா சட்டங்களையும் விட முக்கியத்துவம் வாய்ந்தது ,இந்நிலையில் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகாவலி அதிகார சபை சட்டம் மற்றைய சட்டங்களை கணக்கில் எடுக்காதது தான்தோன்றித்தனமான செயற்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.