Contact Form

Name

Email *

Message *

Search This Blog

ரயிலில் பெண் மீது பாலியல் தாக்குதல் : பிரித்தானியாவில் இலங்கையருக்கு 8 மாத சிறை – பெண்களுக்கு அருகில் அமரவும் தடை

பிரித்தானியாவில் ரயிலில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 39 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்ப…

Image


பிரித்தானியாவில் ரயிலில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாகத் தாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 39 வயதுடைய இலங்கையர் ஒருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகங்களின் தகவலின்படி, Stoke-on-Trent பகுதியில் இருந்து Manchester நோக்கிப் பயணித்த ரயிலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் பெண்ணுக்கு அருகில் அமர்ந்த பின்னர், தன்னை அநாகரிகமாக வெளிப்படுத்தி பாலியல் செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சம்பவத்தை உணர்ந்த பெண் உடனடியாக அதனை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து, British Transport Police அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Manchester Crown Court-இல் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து, அவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபருக்கு 10 ஆண்டுகளுக்கான Sexual Harm Prevention Order பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது தனக்குத் தெரியாத பெண்களுக்கு அருகில் அமர்வது உள்ளிட்ட விடயங்களில் அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவர் 10 ஆண்டுகளுக்கு பாலியல் குற்றவாளிகளுக்கான அறிவித்தல் விதிமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.


You may like these posts

Comments

Most Reading Posts