கார்டிப் (cardiff ) நகரில் வாகன நிறுத்துமிடத்தில் மனைவியை கொலை செய்த இலங்கை கணவருக்கு ஆயுள் தண்டனை
கார்டிப் நகரில் வாகன நிறுத்துமிடத்தில் தனது பிரிந்து வாழ்ந்த இலங்கை மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் 37 வயதுடைய இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்…

கார்டிப் நகரில் வாகன நிறுத்துமிடத்தில் தனது பிரிந்து வாழ்ந்த இலங்கை மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் 37 வயதுடைய இலங்கை நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய நிவுன்ஹெல்லகே டோனா நிரோத கலாப்னி நிவுன்ஹெல்ல (Niwunhellage Dona Nirodha Kalapni Niwunhella), “நிரோதா” என அறியப்பட்டவர், 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதி கார்டிப் நகரின் ரிவர்சைடு பகுதியில் உள்ள சவுத் மோர்கன் பிளேஸ் வாகன நிறுத்துமிடத்தில் குத்திக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
அவரது பிரிந்து வாழ்ந்த கணவர் பென்ட்வின் பகுதியைச் சேர்ந்த திஸரா வெராகலாகே( Thisara Weragalage), தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் பல மாதங்களாக மனைவியிடமிருந்து பிரிந்திருந்தார்.
வெராகலாகே ஆரம்பத்தில் கொலை குற்றச்சாட்டை மறுத்திருந்தாலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வெராகலாகேயின் “கொடூரமான சுயநலம்” நிரோதாவின் வாழ்க்கையை முடித்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
நிரோதா தனது பணியிடத் தோழருடன் நெருங்கிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், தம்பதியருக்கிடையேயான உறவில் பிளவு ஏற்பட்டதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வெராகலாகேக்கு (Thisara Weragalage) ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், விடுதலை பரிசீலனைக்கு முன் குறைந்தது 23 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறையில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
You may like these posts
cardiff
Comments