லண்டனில் பாடசாலைக்குச் சென்ற 16 வயது மாணவி விபத்தில் உயிரிழப்பு
வடக்கு லண்டனில் உள்ள Highgate School பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 16 வயதுடைய மெலீஷா பிரேமரத்ன, கார் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார். வியாழக்கிழமை (24) காலை சுமார் 8.15 மண…

வடக்கு லண்டனில் உள்ள Highgate School பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 16 வயதுடைய மெலீஷா பிரேமரத்ன, கார் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை (24) காலை சுமார் 8.15 மணியளவில் Highgate, North Road பகுதியில் பாதசாரி ஒருவரும் காரொன்றும் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாக Metropolitan Police தெரிவித்துள்ளது. 12ஆம் தர மாணவியான மெலீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரை செலுத்திய 68 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே இருந்ததுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனம் தங்களுடையது என தனியார் வாடகை வாகன நிறுவனமான Addison Lee தெரிவித்துள்ளது.
மெலீஷாவின் குடும்பத்தினர் அவரை “எங்கள் வாழ்க்கையின் ஒளி; அற்புதமான ஒருவர்” என நினைவுகூர்ந்துள்ளனர். Highgate School நிர்வாகமும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
Comments